ஃபிடல் காஸ்ட்ரோ (FIDEL CASTRO)
பெயர் : ஃபிடல் காஸ்ட்ரோ
இயற்பெயர் : பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ்
பிறப்பு : 13/08/1926
இறப்பு : 25/11/2016
பெற்றோர் : ஏஞ்சல் காஸ்ட்ரோ-லினா
இடம் : கியூபா
வகித்த பதவி : கியூபாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அதிபர்
வரலாறு:-ஃபிடல் காஸ்ட்ரோ
👉 ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏஞ்சல் காஸ்ட்ரோ-லினா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரின் முழுப்பெயர் பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ். இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார்.
👉 ஃபிடல் காஸ்ட்ரோவின் தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு குடிபெயர்ந்தவர். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏஞ்சல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். ஃபிடல் காஸ்ட்ரோவின் தாய் லினா, கியூப பெண்மணி ஆவார்.
👉 இந்த தம்பதிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் முதல் குழந்தை ஃபிடல் காஸ்ட்ரோ. இரண்டாவதாக பிறந்த குழந்தை ரவுல் காஸ்ட்ரோ. அடுத்த ஐவரும் பெண் குழந்தைகள்.
👉 1930ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக சான்டியாகோ டி-கியூபாவில் உள்ள ஏஞ்சல் காஸ்ட்ரோவின் குடும்ப நண்பர் வீட்டிற்கு ஃபிடல் காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், அவரது சகோதர சகோதரிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
👉 ஏஞ்சல் காஸ்ட்ரோவின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஆனால், அவர் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் காஸ்ட்ரோ குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழு குடும்பமும் பகிர்ந்து கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.
👉 ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி பள்ளிப்படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் டுய ளுயடடந எனும் பள்ளியில் ஃபிடல் காஸ்ட்ரோ படித்தார். அதன்பின் ஃபிடல் காஸ்ட்ரோ La Salle பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
👉 1941ல் பெலன் கல்லூரியில் உயர் படிப்பிற்காக ஃபிடல் காஸ்ட்ரோ சேர்க்கப்பட்டார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.
👉 ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் கல்லூரி பருவம் :
👉 ஃபிடல் காஸ்ட்ரோ 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார். ஹவானா பல்கலைக்கழகத்தில் அவர் சட்டம் படித்து கொண்டிருந்தபோது, மேடை பேச்சாளராக தன்னுடைய திறமைகளை கூர்மைப்படுத்தி ஓர் அரசியல் செயல்பாட்டாளராக மாறினார்.
👉 கல்லூரியிலும் அரசியலில் பங்கு கொண்டார். அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அமெரிக்கா கியூபா மக்களை அடிமையாக வைத்திருப்பதைக் கண்டு வெகுண்டெழுந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட தொடங்கினார்.
👉 அச்சமயம் இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்களிடையே இயங்கிக்கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிசம், மற்றொன்று ஆர்த்தோடாக்ஸ் இயக்கம். கியூபா மக்களின் விடுதலைக்கு கம்யூனிசம்தான் மிகச் சரியானது என உணர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு போராட்டங்களும் செய்தார். தனது பேச்சுத்திறமையால் மக்களைக் கவர்ந்தார்.
👉 ஃபிடல் காஸ்ட்ரோ ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் சகோதரர் எமிலியோவிற்காக முதன்முதலில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரின் வயது 14.
👉 பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார் யார் எந்த எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள்? எப்படி வாக்களிக்க வேண்டும்? என்று விளக்குவது ஃபிடல் காஸ்ட்ரோவின் பொறுப்பு. இதில் தான் வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார்.
👉 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்திய ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா கியூபா அரசின் அரியணை ஏறினார். பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. மறுபக்கமோ தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வறுமையில் உழண்டனர்.
👉 பாடிஸ்டாவின் உண்மையான முகத்தை பற்றி மக்களுக்கு சொல்வதற்காக 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் பத்திரிக்கையை துவங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசினை எதிர்த்து, புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் போர்...!!
👉 ஃபிடலின் எண்ணம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பாடிஸ்டாவையும் கியூபாவிலிருந்து துரத்தி அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. இதனால் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பகைமை அதிகமாகிக்கொண்டே இருந்தது.
தாய்நாடே முக்கியம் :
👉 ஃபிடல் காஸ்ட்ரோ, ஜுலை 26, 1953ல் மோன்கடா ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். மாணவர் பருவத்தினராக இருந்தபோதிலும், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த சிறுபடையோடு சென்றார். உயிர் போனால் போகட்டும், தாய் நாட்டு மக்களின் மானமே பெரிது என முழங்கியபடி, ஃபிடல் காஸ்ட்ரோ படை முன்னேறியது.
👉 நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாகனம் கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது. இதனால் ஃபிடல் காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார்.
👉 1953ல் ஃபிடல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார். அமெரிக்காவை கடுமையாக சாடினார்.
நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை :
👉 'நீங்கள் ஒரு குற்றவாளியை பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா?
👉 உனக்கு எத்தனைக் குழந்தைகள்?
👉 வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்?
👉 எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?
👉 என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா?
👉 அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா?
👉 இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனை சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளை சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ளமாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம் என்று 76 நாட்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியை பார்த்து கேட்கிறார்.
👉 நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.
'சே'வுடன் முதல் சந்திப்பும், கியூபாவின் விடுதலையும் :
👉 ஃபிடல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்ட பின் இப்படியே போராடி கொண்டிருந்தால் ஒரு பயனும் கிடைக்காது. இனி கொரில்லா யுத்தமுறைகளை கையாள வேண்டும் என எண்ணி, யுத்தமுறைகளை கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு செல்கிறார்.
👉 அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளை கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன, தேச எல்லைகடந்த மனிதநேய போராளியான மாவீரன் சேகுவேராவை சந்திக்கிறார்.
👉 கியூபாவின் பிரச்சனையை அறிந்த சேகுவேரா, 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல் அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்கத்தை அதிகப்படுத்தி கொண்டிருந்தார்கள்.
👉 1956ஆம் ஆண்டு நீர் கசியும் சொகுசு படகில், 81 ஆயுதம் தாங்கிய சகாக்களோடு, ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோர் கியூபாவிற்கு திரும்பி வந்தனர்.
👉 அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தினார். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களை திரட்டிக் கொரில்லா யுத்தப்படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர்.
👉 1959ஆம் ஆண்டு 9,000 கொரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பி சென்றார்.
👉 இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வந்தது. பின் கியூபாவின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.
👉 கியூபா விடுதலைக்கு பெரும் பங்காற்றியவர் சேகுவேரா என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்றும் சேகுவேராவையும், ஃபிடலையும் கூறுவார்கள்...
அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ :
👉 ஃபிடல் காஸ்ட்ரோ பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும், அமெரிக்காவிற்கும் நேரடியான மோதல்கள் நடைபெற தொடங்கியது. ஆனால் இதையெல்லாம் ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்.
👉

கருத்துகள்
கருத்துரையிடுக