கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் லாரி பேஜ் (LORRY PAGE)
பெயர் : லாரி பேஜ்
பிறப்பு : 26-03-1973
பெற்றோர் : கார்ல், குளோரியா
இடம் : அமெரிக்கா
வகித்த பதவி : கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்
வரலாறு:-கூகுள் தேடுபொறியின் நாயகன்..!!
🌟பெருந்தவம் இருந்து அரிய வரம் பெற்றது எல்லாம் புராணக்காலம். வேண்டியவற்றை சிங்கிள் க்ளிக்கில் மைக்ரோ நொடிகளில் கண்டு அடைதல்தான் கூகுள் காலம்.
🌟இணைய ஜாம்பவானான கூகுள் (Google) இன்று உலகின் தலைசிறந்த தேடுபொறி இயந்திரமாக செயல்பட்டு வருகிறது.
🌟தற்போதைய காலத்தில் ஏதேனும் ஒன்றை தேடுவது என்பது மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. கூகுளில் ஏதேனும் ஒன்றை தேடினால் அதற்கான பதில் ஒரு சில நொடிகளிலேயே கிடைத்துவிடுகிறது. நமது பெற்றோருக்கு தெரியாத விஷயங்கள் கூட கூகுளில் உள்ளது.
🌟கூகுளை விட என்னை புரிந்தவர் யாருமில்லை என்று புதுமொழிகளும் கூட வந்துவிட்டது. இந்த புதுமொழிக்கு ஏற்றாற்போல் நாம் தேடும் சொற்களை தவறாக உள்ளீடு செய்தாலும் அதை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான பதிலை நமக்கு கொடுத்துவிடும்.
🌟கூகுளில் வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்ற எண்ணற்ற செயலிகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம் நம் தேடலுக்கான தெளிவான பதில்கள் எளிதில் கிடைத்துவிடுகிறது.
🌟இதுமட்டுமின்றி Playstore, Drive, Translator என இன்னும் எண்ணிலடங்கா செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.
🌟தேடுபொறிகள் பல இருந்தாலும் அனைவரும் எளிதாக பயன்படுத்துவது கூகுள் தேடுபொறிதான். மற்ற தேடுபொறிகளை விட துல்லியமான, தெளிவான பதில்களை உடனுக்குடன் கொடுக்கிறது இந்த கூகுள்.
🌟மற்ற தேடுபொறிகளில் தேடலுக்கான பதில்கள் துல்லியமாக கிடைக்காததால் அதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் கூகுள்.
🌟'புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். அது இந்த உலகையே புரட்டிப்போட வேண்டும்' என்று மனதில் உருவான தேடல்தான், இன்று மாபெரும் தேடுபொறியாக உருவெடுத்துள்ளது. அந்தத் தேடலின் நாயகன்... லாரி பேஜ்!
🌟லாரி பேஜ், 1973ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தார். இவருடைய தந்தை கார்ல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், இவருடைய தாய் குளோரியாவும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பணியில் இருந்தார்.
🌟எனவே, லாரி பேஜ் சிறுவயதிலேயே கணினி ஞானம் பெற்றிருந்தார். நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே, ஹோம்வொர்க்கை வேர்டு புரௌசரில் டைப்செய்து பிரிண்ட் எடுத்துச் சென்று ஆசிரியரைத் திகைக்கச்செய்தார், லாரி பேஜ்.
🌟கம்ப்யூட்டரையும் வீட்டில் இருக்கும் மற்ற கருவிகளையும் பிரித்து ஆராய்ந்து, பின்பு அவற்றை ஒன்றுசேர்த்து சீர்செய்வது தான் அவரது பொழுதுபோக்கு.
🌟லாரி பேஜுக்கு சிறுவயதில், சரளமாக பேசுவதில் தயக்கம் இருந்தது. இவரது தந்தை கார்ல், இதை களைய நினைத்தார். ஓய்வு நேரங்களில் மகனோடு பல விஷயங்களில் விவாதங்கள் நடத்தினார். அந்தப் பயிற்சியால் பேசக் கற்றுக்கொண்டார் லாரி பேஜ். இவரின் எட்டாவது வயதில், பெற்றோரின் விவாகரத்து நிகழ்ந்தது.
🌟லாரி பேஜ் தனது 12-வது வயதில் கடந்த இரு நூற்றாண்டுகளில் அசாத்தியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கைப் புத்தகத்தை படித்தார். இயற்பியல், மின்சாரவியல், இயந்திரவியல் துறைகளின் அற்புத மேதை டெஸ்லா. மாறுதிசை மின்னோட்டத்தைக் (AC) கண்டறிந்தவர். ஆனால், டெஸ்லாவால் எடிசன் போல வணிகரீதியாக வெற்றிபெற முடியவில்லை. தொழிலில் பல நஷ்டங்களைச் சந்தித்து, வறுமையில் உழன்று தன் 87வது வயதில் ஒரு தோல்வியாளராகவே இறந்துபோனார்.
🌟இவரது புத்தகத்தைப் படித்து முடித்து மனம் உடைந்தார் லாரி பேஜ். கூடவே ஒரு விஷயமும் மனதில் பதிந்தது. 'கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவன் வெற்றியாளன் அல்ல, அதை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து சாதிப்பவனே உண்மையான வெற்றியாளன்!'
🌟பள்ளிப் படிப்புக்கு பின் லாரி பேஜ், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்தார். அங்கே தலைமைப் பண்புடன் நிர்வாகத்தை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. கற்பனையாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அதைச் சந்தைப்படுத்தும் போட்டிகள் சிலவற்றில் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டார்.
🌟இதன்மூலம் லாரி பேஜ்-க்கு நிறைய அனுபவம் கிடைத்தது. படிப்பு முடிந்ததும் கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் பிஹெச்.டி படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த இடத்தில் படிக்கலாமா? வேண்டாமா? என மாணவர்கள் கல்வி வளாகத்தை சுற்றிப்பார்த்த பின் முடிவெடுக்கும் வசதி அமெரிக்காவில் உண்டு.
செர்ஜி பிரின் :
🌟ஸ்டான்ஃபோர்டை சுற்றிவர லாரி பேஜுக்கு உதவியாக உடன் வந்த சீனியர் மாணவர் செர்ஜி பிரின். இவர் ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவர். யூத இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், பல அரசுக் கட்டுப்பாடுகளையும், சமுதாயக் கொடுமைகளையும் சந்தித்தது.
🌟செர்ஜியின் ஆறாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். அப்பா மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், அம்மா நாசா விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானியாகவும் பணியில் சேர்ந்தார்கள்.
🌟சிறுவயது முதலே செர்ஜிக்கு கணக்கு போடுவது மிகவும் பிடிக்கும். இவரது ஒன்பதாவது வயதில் அப்பா ஹோம் கம்ப்யூட்டர் வாங்கித் தந்தார். இதற்குப் பிறகு, எப்போதும் கம்ப்யூட்டரோடுதான் இருப்பார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதம், கம்ப்யூட்டர் இரண்டையும் விசேஷ பாடங்களாக எடுத்தார்.
🌟இவர் எப்போதும் முதல் மதிப்பெண் தான் எடுப்பார். வகுப்பில் முதல் வரிசையிலேயே அமர்ந்திருப்பார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் முதுகலைப் பட்டம் வாங்கியபின், பிஹெச்.டி படிப்பில் சேர்ந்தார். லாரி பேஜ்-யை இப்போதுதான் முதன்முதலாக சந்திக்கிறார்.
🌟லாரி பேஜுக்கும், செர்ஜி பிரினுக்கும் தாங்கள் அறிவாளி என்னும் தன்முனைப்பு அதிகம். ஆகவே, இருவருக்கும் ஆரம்பத்திலேயே ஆகவில்லை. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏட்டிக்குப்போட்டி போட்டனர். விவாதங்கள் பல புரிந்தனர். லாரி பேஜுக்கு, செர்ஜி பிரினை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், ஸ்டான்ஃபோர்டு பிடித்திருந்தது. அதனால் அங்கேயே சேர்ந்தார்.
🌟பிஹெச்.டி-க்காக இணையம் சார்ந்த ஆராய்ச்சி செய்ய, லாரி பேஜ் ஆசைப்பட்டார். 90-களின் பிற்பகுதியில்தான் இணையம் புகழ்பெற்று வந்தது. தினமும் எண்ணற்ற இணையதளங்கள் முளைத்துக்கொண்டிருந்தன. சுவாரஸ்யம் இல்லாமல் இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு பொழுதில் லாரியின் மூளைக்குள் ஒரு யோசனை பிரகாசித்தது.
யோசனை இதுதான் :
🌟ஏபிசிடி.காம் என்ற இணையதளத்திற்கான இணைப்பு (Link), வௌ;வேறு இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அப்படி எத்தனை இணையதளங்களில் ஏபிசிடி.காம் லிங்க் ஆகியிருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் அந்த தளத்தின் 'புகழ் அளவை' கணக்கிடுவதே லாரி பேஜின் அடிப்படை யோசனை.
🌟'BackRub' என அந்த ஆய்வுக்கு பெயரிட்ட லாரி பேஜ், அதற்கு Crawler என்ற புரோகிராமையும் எழுதினார். அது, குறிப்பிட்ட இணையதளத்திற்குஃஇணையப்பக்கத்திற்கு எத்தனை பேர் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை சில நிமிடங்களில் கொட்டியது.
🌟ஆனால், அந்த பட்டியலில் உள்ள எத்தனை இணையப்பக்கங்கள் நிஜமாகவே தகவல்கள் உடையவை எனக் கண்டறிய வேண்டிய சவால் இருந்தது. அப்படி கண்டறிவதன் மூலம், தகவல் செறிவு உள்ள பக்கங்களை பட்டியலின் முதல் வரிசையிலும், செறிவற்ற பக்கங்களை பின்வரிசையிலும் தள்ளிவிடலாம் என நினைத்தார். இதற்காக, லாரி பேஜுக்கு அவரது எதிரியின் உதவி தேவைப்பட்டது. அவர்தான் செர்ஜி பிரின்.
🌟இணையம் என்ற பிரம்மாண்ட சமுத்திரத்தில் எது தேவை, எது தேவையற்றது? எனத் தகவல்களை தரம் பிரிக்கும் ஆய்வு ஒன்றில்தான் செர்ஜி அப்போது ஈடுபட்டிருந்தார்.
🌟லாரி பேஜ், தன் ஆய்வு பற்றி சொன்ன யோசனை செர்ஜிக்கு பிடித்திருந்தது. ஆகவே, 1996ஆம் ஆண்டு டாம் ரூ ஜெர்ரி போல் இருந்தவர்கள் BackRub ஆய்வுக்காக நண்பர்கள் ஆனார்கள். இந்த தருணத்தில் லாரி பேஜின் தந்தை இறந்துபோக, துக்கத்தில் துவண்ட நண்பனை, ஆய்வில் கவனம் செலுத்துமாறு மீட்டுவந்தார் செர்ஜி.
🌟இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை எல்லாம் எடுத்துச் சேமிக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட கணினி சக்தி தேவைப்படும். அதனால் அக்கம்பக்க உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு முடியும் வரை கடனாக கொடுங்கள் என கெஞ்சி கம்ப்யூட்டர்களை பெற்றனர்.
🌟லாரி பேஜ், சுமார் ஏழரைக் கோடி இணையப்பக்கங்களை, Pagerank என்ற சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் நுட்பத்தை உருவாக்கினார். செர்ஜி, ஒவ்வோர் இணையதளத்தின் தகவல்களை ஆராய்ந்து 'சூப்பர்', 'ஓ.கே', 'குப்பை' எனச் சீர்தூக்கித் தரம் பிரிக்கும் சூட்சுமத்தை உருவாக்கினார். இருவரது கடுமையான உழைப்பில் BackRub வடிவம் பெற்றது.
🌟அதை இயக்கிப்பார்த்த ஸ்டான்ஃபோர்டின் பேராசிரியர் ராஜீவ் மோட்வானி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். 'நீங்கள் உருவாக்கி இருக்கின்ற தொழில்நுட்பம் சாதாரணமானது அல்ல அட்சயப்பாத்திரம்'! என்று வியந்து கூறினார்.
🌟அப்போது வரை, இணையத்தில் தேவையானதை துல்லியமாக தேடி எடுக்கும் உபயோகமான ஒரு தேடல் இயந்திரம் (Search engine) இல்லை. வெறும் வார்த்தைகளைக் கொண்டு தேடி, தேவையற்ற குப்பைகளை எல்லாம் தேடிக் கொட்டும் தெளிவற்ற தேடல் இயந்திரங்களே இருந்தன.
🌟உதாரணத்திற்கு, 'காந்தி' எனத் தேடினால் வெறுமனே, 'காந்தி காந்தி காந்தி' என்ற வார்த்தை ஓர் இணையப்பக்கம் முழுவதும் நிரப்பப்பட்டு இருந்தால், அது முதலில் பட்டியலாகி எரிச்சலைக் கொடுக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக