சுனிதி சாலமன்



பெயர் : சுனிதி சாலமன்

பிறப்பு : 14-10-1939

இறப்பு : 28-07-2015

இடம் : சென்னை, தமிழ்நாடு

வகித்த பதவி : மருத்துவர்

விருதுகள் : தேசிய பெண்கள் உயிரியல் அறிவியலாளர் விருது,பத்மஶ்ரீ,அன்னை தெரசா நினைவுவிருது



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


சுனிதி சாலமன் என்பவர் ஒரு மருத்துவராவார். இவர்தான் இந்தியாவின், தமிழகத்தின் சென்னையில் 1986 முதன் முதலில் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதை கண்டறிந்தவர் ஆவார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராக அப்போது இருந்தார்.


பணிகள்:


இவர் எயிட்ஸ் நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் தன்னார்வ ஆலோசனை மற்றும் சோதனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1993இல் நிறுவினார். 1993இல் தன் வேலையை விட்டு விலகி எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிக்கும் ஒயி.ஆர்.ஜி. கேர் தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். எயிட்ஸ் நோயிக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க மறுத்த அந்தக் காலகட்டத்தில் குறைந்த வசதிகளுடன் சென்னை பாண்டி பசார் பகுதியில் கூடாரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கத் துவங்கினார்.


விருதுகள்:


இவரது பணிகளை பாராட்டும் விதமாக 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் தேசிய பெண்கள் உயிரியல் அறிவியலாளர் விருதை வழங்கினர். தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021