இலான் மஸ்க் (ELON MUSK)

 


பெயர் : இலான் மஸ்க்

பிறப்பு : 28-06-1971

இடம் : தென்னாப்பிரிக்கா

வகித்த பதவி : தொழிலதிபர்



வரலாறு:-இலான் மஸ்க்

🚀திறமையும், முயற்சியும் இருந்தாலே போதும்... வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் சென்று விடலாம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இலான் மஸ்க் !!


🚀தன்னுடைய கடினமான முயற்சியாலும், திறமையாலும் கோடீஸ்வரராகவும், கண்டுபிடிப்பாளராகவும், ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவராகவும் உயர்ந்துள்ளார்.


🚀பல கண்டுபிடிப்புகள் லாபத்தின் நோக்கத்திற்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டாலும், சிலரே தங்களின் கண்டுபிடிப்புகள் லாபத்தை காட்டிலும் மக்கள் மனதையும் கவர வேண்டும் என விரும்புவர். அதில் ஒருவர் தான் இலான் மஸ்க்.


🚀இவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்னும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறார். மேலும், தான் செவ்வாய் கிரகத்தில் தான் சாக வேண்டும் என்று கூறியவர்.


🚀பிற கூட்டாளிகளுடன் இணைந்து இலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆயின.


🚀விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்ஸின் முதன்மை நோக்கமாகும். மேலும், செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், இலான் மஸ்க்.


யார் இந்த இலான் மஸ்க்?


🚀இலான் ரீவ் மஸ்க், 1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். தானாக கற்கும் திறன் கொண்ட இலான் மஸ்க், கம்ப்யூட்டர் புரோகிராமிங் முறைகளை தானாக கற்க தொடங்கினார். மேலும், தன்னுடைய கவனத்தை கம்ப்யூட்டர் புரோகிராமிங் துறையில் செலுத்தினார்.


🚀இலான், தன்னுடைய 12வது வயதிலேயே ஒரு சிறு விளையாட்டை வடிவமைத்து, அதை ஒரு தொழில்நுட்ப பத்திரிக்கைக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்றார். தற்போது, பிளாஸ்ட்டர் என்ற அந்த விளையாட்டு ஆன்லைனில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


🚀இலான் மஸ்க், புத்தகத்தை படிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். இலானின் பெற்றோர்கள் பிரிந்ததினால், இலான் தென்னாப்பிரிக்காவிலிருந்து, தன் தாயுடன் கனடாவில் குடியேறினார். கனடாவில் குடியுரிமை பெற்று, தன்னுடைய மேல்நிலை பள்ளிப்படிப்பையும் முடித்தார்.


🚀1992ஆம் ஆண்டில் ஒண்டாரியோவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் படித்த பின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இரண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.


🚀இயற்பியல் மற்றும் வர்த்தக துறையில் இரண்டு தனித்தனி படிப்பை முடித்த இவர், இன்றுவரை இந்த இரண்டு துறைகளையும் வைத்து பல புதிய கண்டுபிடிப்புகளை தந்துக்கொண்டே இருக்கிறார். இச்சமயத்தில் இவருக்கு புதிய தொழில் தொடங்க யோசனைகள் தோன்றியது.


🚀இலான் மஸ்க், 1995ஆம் ஆண்டில் சிலிகான் வேலியின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் டாக்டரேட் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தார். ஆனால், இரண்டே நாட்களில், தனது படிப்பை விட்டு நின்று தன்னுடைய பிஸினஸ் கனவுகளை நனவாக்க தொடங்கினார்.


Zip 2 :


🚀இலான் மஸ்க், 1995ஆம் ஆண்டு Zip 2 software company-யை ஆரம்பிக்க, அவரது சகோதரரும், அப்பாவும் சேர்ந்து 28000 டாலர்கள் கொடுத்தனர். இந்நிறுவனம் பல செய்தித்தளங்களுக்கும், இணையதளங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தி தரும் நிறுவனமாக விளங்கியது. பிரபல ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிகாகோ ட்ரிபியூன் போன்றவற்றுடன் இணைந்து Zip 2 company-யை விரிவுப்படுத்தி கொண்டார். இதன்மூலம் Zip 2 company மேலும் வளர இலான் மஸ்க் முக்கிய காரணமாக மாறினார். Zip 2 மேலும் வளர பல தடைகள் வந்து கொண்டே இருந்தன. Zip 2 software company-யின் நிறுவனர் மட்டுமல்லாமல் CEO பொறுப்பையும் வகிக்க இலான் மஸ்க் ஆசைப்பட்டார். ஆனால், மற்ற உறுப்பினர்களின் தடைகளால் CEO பொறுப்பை ஏற்க இவருக்கு தடை ஏற்பட்டது.


🚀அதன்பின் இலான் மஸ்க், 1999ஆம் ஆண்டு தனது Zip 2 software company-யை விற்க முடிவு செய்தார். பின் Zip 2 நிறுவனத்தை விற்று தனக்கான பங்கை மட்டும் எடுத்துக் கொண்டார். இந்த பங்கானது கிட்டத்தட்ட 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது. தான் ஆரம்பித்த முதல் கம்பெனி அவருக்கு தோல்வியை தந்தாலும், மனம் தளராமல் தனது பங்கை வைத்து அடுத்த நிறுவனத்தை தொடங்கினார்.


X.com :


🚀Zip 2 கம்பெனியை விற்ற பங்கினை கொண்டு அதே ஆண்டில் (1999) X.com என்ற Online Banking (இணையம் மூலம் பணம் செலுத்தும் வசதி) கம்பெனியை தொடங்கினார். தொடங்கிய அடுத்த ஆண்டே, X.com கம்பெனியுடன், கான்பினிட்டி என்ற நிறுவனம் இணைந்தது. இந்த இணைப்புடன், பேபால் (Paypal) நிறுவனமும் இணைந்தது. அதன்பின் இலான் மஸ்க், பேபால் நிறுவனத்தின் துணை நிறுவனரானார். நிறுவனத்தின் முக்கிய அங்கம் பேபால் என்பதை உணர்ந்த இலான் மஸ்க், X.com என்ற தனது நிறுவனத்தை 2001ல் பேபால் என மாற்றினார். ஆரம்பத்தில் பேபால் சேவை மக்களிடம் அதிகம் வரவேற்கப்படாமல் இருந்தாலும், இலானின் வழிகாட்டுதலின் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஆயிரத்தில் இருந்த பேபால் பயனாளர்களை மில்லியன் பயனாளர்கள் வரை கொண்டு சென்றது இலானின் வழிகாட்டுதலே ஆகும். ஒருவரின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் என்பதற்கேற்ப.... மற்ற கூட்டாளிகளுக்கும், இலானுக்கும் சண்டை இருந்துக்கொண்டே வந்தது. இந்த சண்டையின் காரணமாக பேபால் நிறுவனமும் விற்கும் நிலைக்கு வந்தது.


🚀பேபால் நிறுவனம், நடியல நிறுவனத்திற்கு விற்கபட்டது. இந்த காலக்கட்டத்தில் நடியல-யின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் பேபால் மூலமாக நடந்து வந்தது. 2002ஆம் ஆண்டு Internet company standards-யை ஒப்பிடும்போது இது மாபெரும் சேலாக இருக்க வேண்டும் என்று 1.5 பில்லியன் டாலருக்கு stock கைமாறியது. இதில் இலானுக்கு பேபால் மூலம் 165 மில்லியன் டாலருக்கு கிடைத்தது.


SpaceX :


🚀இந்த காலக்கட்டத்தில் தான் இலான் மஸ்க் விண்வெளி பயணத்தை பற்றிய கனவை காண ஆரம்பித்தார். இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் Miniature experimental greenhouse பற்றி யோசிக்க ஆரம்பித்தார். மேலும், Vertical Integration and Modular approach of software Integration என்னும் கோட்பாட்டை வைத்து மலிவான ராக்கெட்டை உருவாக்க வேண்டும். மேலும், அந்த ராக்கெட் திரும்ப பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்தார். இவையெல்லாம்தான் SpaceX நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது. மலிவாக ராக்கெட்டை தயாரிப்பதுதான் இலான் மஸ்க்கிற்கு தொலைநோக்கு பார்வையாக இருந்தது.


🚀இலான் மஸ்க் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த முதலில் பல ரஷ்ய மற்றும் அமெரிக்க நிறுவனங்களை தொடர்பு கொண்டார். இலான் மஸ்கின் திட்டம் நிறுவனங்களுக்கு பிடித்திருந்தாலும், குறைந்த செலவில் ராக்கெட்டை உருவாக்கி அதை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பது என்பது இயலாத காரியம் என்றும் அப்படியே குறைந்த செலவில் ராக்கெட் செய்தாலும் அது பாதுகாப்பாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் இலான் மஸ்கின் இந்த யோசனையை நிராகரித்தன. தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த பல நிறுவனங்கள் நிராகரித்ததால், இலான் மஸ்க் இந்த திட்டத்தை தானே செயல்படுத்த திட்டமிட்டார். 2002ஆம் ஆண்டு SpaceX நிறுவனத்தை தொடங்கினார்.


🚀அதன்படி பேபால் மூலம் கிடைத்த பங்கு மற்றும் சில பங்குதாரர்களின் உதவியுடன் தனது சொந்த செலவில் ராக்கெட்டை உருவாக்கி, அதை தன் SpaceX நிறுவனம் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார். அதன்பின் SpaceX நிறுவனம் வெகு விரைவில் லாபத்தை பார்க்க ஆரம்பித்தது. இதன்மூலம் மற்ற விண்வெளி நிலையங்களை காட்டிலும், குறைவான விலையில் ராக்கெட்டை உருவாக்கி விண்ணுக்கு செலுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.


🚀SpaceX நிறுவனம் முதலில் Falcon 1 மற்றும் Falcon 9 என்ற இரண்டு ராக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. மேலும், SpaceX நிறுவனத்தின் முதல் விண்கலம் Dragon ஆகும். அதன்பின் ஏழு ஆண்டுகளில் Falcon launch vehicles and the Dragon multipurpose spacecraft-டை வடிவமைத்தது. இலான் மஸ்க், சர்வதேச விண்வெளி மையத்துடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.


🚀இதைத்தொடர்ந்து, SpaceX நிறுவனம் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் கோள்களை வடிவமைக்க தொடங்கியது. இதன்பின், SpaceX நிறுவனம் உலகத்தின் தலைசிறந்த தனியார் செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மையமாக மாறியது. விண்வெளிக்கான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை ஏற்படுத்துவதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.


🚀மேலும், இந்நிறுவனம் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


🚀இலான் மஸ்கின் SpaceX நிறுவனம் தற்போது உலக வரலாற்றில் மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் திட்டத்திற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


🚀அதன்படி ஜப்பான் நாட்டு தொழிலதிபரான யுசாகு மேசாவா என்பவரை நிலவுக்கு அனுப்பவுள்ளது. இவர் ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போல சோசோடவுன் என்ற ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


🚀விண்வெளி துறையில் மட்டும் தன் சாதனைகளை நிரூபித்து காட்டிய இலான் மஸ்க் அடுத்து வருங்காலத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மின் கார்களை தயாரித்தார்.


🚀இலான் மஸ்கை உலக புகழ்பெற வைத்த ஒரு நிறுவனம் Tesla Motors.


🚀டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தில் தனது பங்கு 7.5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021