கலீலியோ கலிலி (GALILIEO GALILEI)


பெயர் : கலீலியோ கலிலி

பிறப்பு : 15-02-1564

இறப்பு : 08-01-1642

பெற்றோர் : வின்சென்சோ கலிலி, கியுலியா

இடம் : இத்தாலி

புத்தகங்கள் : தி அஸயேர், Dialogue concerning the Two Chief World System, 

Dialogue Concerning the Two Chief World Systems

வகித்த பதவி : கண்டுபிடிப்பாளர்



வரலாறு:-கலீலியோ கலிலி

👉இத்தாலியின் பைசா நகரில் 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி கலிலியோ பிறந்தார். புகழ்பெற்ற குழல் இசைக்கருவி கலைஞரும், இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி (Vincenzo Galilei) என்பவருக்கும், கியுலியா (Giulia) என்பவருக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாக பிறந்தார். கலீலியோ குழல் இசையை தந்தையிடமிருந்து கற்று தேர்ந்தார்.


👉கலீலியோ கலிலிக்கு எட்டு வயதாக இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்கு குடிபெயர்ந்தது. பின்னர் புளோரன்சிலிருந்து 35கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசா அபே (Vallombrosa Abbey) துறவியர் மடத்தில் கல்வி கற்றார். சிறுவயதிலேயே அறிவுக்கூர்மையும், ஆழமாக சிந்திக்கும் திறனையும் கலீலியோ பெற்றிருந்தார்.


கல்வியறிவு :


👉பள்ளியில் படித்தபோது ஆசிரியர், அரிஸ்டாட்டில் கூற்றுப்படி பெண்களுக்கு பற்களின் எண்ணிக்கை 28 என்று கூறினார். ஆனால், கலீலியோ தனது தாயார் மற்றும் பக்கத்து வீட்டு பெண்களின் பற்களை எண்ணிவிட்டு வந்து அவர்களுக்கும் ஆண்களைப்போல 32 பற்கள் இருக்கிறது என்றார். இதனை கண்டு ஆசிரியரும், மாணவர்களும் வியந்து போனார்கள்.


👉கவிதைகள் புனைவது, இசைப்பாடல் இயற்றுவது, ஆர்கன் வாசிப்பது, யாழ் மீட்டுவது போன்றவற்றிலும் கலீலியோ தனித்திறமை பெற்றிருந்தார். பார்க்கும் பொருட்களை ஓவியமாகவோ, பொம்மையாகவோ வடித்துவிடுவார். சிறுசிறு இயந்திரங்களையும் வடிவமைப்பார்.


👉அவருக்கு கணிதம் படிக்க ஆர்வம். ஆனால் தந்தையோ மருத்துவம் பயில சேர்த்துவிட்டார். அதனால் ரகசியமாக கணிதம் கற்றார் கலீலியோ. இதனால் தந்தை, ஆசிரியர்களின் எதிர்ப்பை பெற்றார். இருந்தாலும் இயற்பியல், உயிரியல், இயந்திரவியல், வானியல் என பலதுறை அறிஞராக மிளிர்ந்தார்.


👉17 வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் சர்ச்சில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு விளக்கு காற்றில் ஆடுவதைக் கவனித்தார். அதன் அலைவீச்சு சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அது ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குச் செல்ல ஒரே அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவருக்கு தோன்றியது. இதை அடிப்படையாக வைத்து தனிஊசலை உருவாக்கினார். இதன்மூலம் நாடித்துடிப்பும் அறியப்பட்டது.


ஆதாரங்கள் கேட்ட கலிலி :


👉கலீலியோ கலிலி பதினேழு வயதில் பைசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதமும், இயற்பியலும் கற்றார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் அவர்தான் அதிகமான கேள்விகள் கேட்கும் மாணவராக இருந்தார்.


👉கற்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள, கலீலியோ கலிலி மட்டும் அதற்கான ஆதாரங்களை கேட்பார்.


👉உதாரணத்திற்கு வெவ்வேறு எடையுடைய இரண்டு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால் அதிக எடையுடைய பொருள் முதலிலும், லேசான பொருள் பின்னரும் தரையில் விழும் என்று கற்பிக்கப்பட்டது. அரிஸ்டாட்டில் கூறியிருந்த அந்த கருத்தை பல்கலைக்கழகங்கள் அப்படியே கற்பித்து வந்தன.


👉ஆனால் விஞ்ஞான கருத்து எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பிய கலிலி அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார். அதனால் ஆசிரியர்களின் கண்டனத்திற்கு ஆளானார்.


👉பின்னர் பட்டம் பெற்ற பிறகு 25 வயதில் பைசா பல்கலைக்கழகத்தில் அவர் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார்.


👉பண்டிதர்களின் மொழியான லத்தீனில் போதிப்பதற்கு பதில் பாமர மொழியான இத்தாலி மொழியில் கற்பித்தார். 2000 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்துவந்த அரிஸ்டாட்டிலின் சில கருத்துக்களை பற்றி கலிலியோ கேள்வி கேட்க தொடங்கினார்.


👉மாணவனாக இருந்து செய்ய முடியாததை ஆசிரியராக இருந்து செய்வோம் என்று தீர்மானித்த கலீலியோ கலிலி, அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய் என்று நிரூபிக்க விரும்பினார்.


👉நிறைய பார்வையாளர்களை அழைத்து பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று இருவேறு எடையுடைய இரண்டு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையில் விழுந்தன.


👉ஓர் எளிய அறிவியல் உண்மையை கண்கூடாக கண்டபோதும் கூடியிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும், இயற்கைக்கு மாறானது என்றும் கூறி நம்ப மறுத்தனர். மேலும், கலிலியை மந்திரக்காரன் என்றும் கூறினர்.


👉மருத்துவ மாணவன் கணித இயற்பியல் ஆய்வு செய்வதா? என்று பேராசிரியர்களே பொறாமை கொண்டு அவர் மருத்துவத்தில் தேர்ச்சி பெறாமல் தடுத்துவிட்டனர். இருந்தாலும் சிற்றரசர் செல்வாக்குடன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார்.


👉பல்கலைக்கழக விதிப்படி சீருடை அணிய கலீலியோ மறுத்ததால் மாதந்தோறும் அபராதம் கட்டி வந்தார். ஒருமுறை மன்னரின் மகன் செய்த தூர் வாரும் எந்திரம் தவறானது என்று சொல்லியதால் கோபத்திற்கு ஆளாகி பணிவாய்ப்பை இழந்தார். இதனால் வறுமையில் வாடினார்.


👉பின் பாதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua) கலீலியோ கலிலிக்கு கணிதப்பேராசிரியர் பணி கிடைத்தது. அங்கு அவரின் ஆராய்ச்சிக்கு மதிப்பு கிடைத்தது. அவரது விரிவுரைகள் புகழ் பெற்றன. அயல்நாட்டு மாணவர்களும் அவரிடம் பயில வந்தனர். பீரங்கி குண்டின் இலக்கை கணித ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததால் இராணுவத்துறையில் செல்வாக்கு பெற்றார். இது அவருக்கு புகழ், நட்பு, வருவாய் எல்லாவற்றையும் பெருக்கித் தந்தது.


கலீலியோ கலிலியின் தொலைநோக்கி :


👉1609ஆம் ஆண்டுகளில் டச்சு நாட்டு கண்ணாடி தயாரிப்பாளர் ஒருவர் தூரத்தில் உள்ள பொருட்களை அருகாமையில் பார்க்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்து மறைத்து வைத்துள்ளார் என்ற செய்தி வதந்தியாக விஞ்ஞானிகள் மத்தியில் பரவியது.


👉அப்போது, ஏன் அது வதந்தியாக இருக்க வேண்டும்?... அப்படி ஒரு சாதனத்தை உருவாக்க முடியாதா? என்ற கேள்வி கலீலியோவிற்கு எழுந்தது.


👉அதன்பின் கலீலியோ தனது சொந்த தேடலில் ஈடுபட்டார். சுமார் 24 மணிநேர விடாமுயற்சிக்கு பின்னர் 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார்.


👉அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (telescope) கண்டுபிடித்தார்...!


👉ஆரம்பத்தில் தொலைநோக்கி spyglass (வேவுக்கண்ணாடி) என்று அழைக்கப்பட்டு பின்னர் telescope என்ற பெயரை பெற்றது.


👉கலீலியோவின் ஆய்வுக்கு அவர் உருவாக்கிய தொலைநோக்கி பெரும் உதவிகரமாக இருந்தது. கடலில் வாணிபம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற தொலைநோக்கிகளை செய்து கொடுத்தார்.


👉பொதுமக்களுக்காக 1609ல் வெனிஸ் நகர மலையில் 'கேம்னைல்' குன்றில் ஒரு தொலைநோக்கியை நிறுவினார் கலீலியோ.


👉அதன்மூலம் மக்கள் விண்வெளி மாயாஜாலங்களை பார்த்து வியந்தனர். செல்வந்தர்கள் அந்த தொலைநோக்கியை விலைக்கு கேட்டனர்.


👉ஆனால் அவர், தனது ஆய்வுக்கு ஊக்கம் தந்த வெனிஸ் நகர தந்தைக்கு அந்த தொலைநோக்கியை அன்பளிப்பாக வழங்கினார்.


👉அதனால் அவர் பல்கலைக்கழகத்தின் நிரந்தர பேராசிரியராகவும், 25 மடங்கு சம்பள உயர்வும் பெற்றார். கலீலியோ கலிலி விண்வெளி அதிசயங்களை 3 நூல்களாக எழுதினார். அவை மிகுந்த புகழ்பெற்றன.


தொலைநோக்கின் பயன்பாடு :


👉கலீலியோ கலிலி, தொலைநோக்கியை கொண்டு வானத்தை ஆராய்ந்து கொண்டே இருப்பார். விண்வெளி அதிசயங்களை கண்டு வியந்தார். அதன்பலனாக விண்வெளியில் அதிசயிதக்க பல கண்டுபிடிப்புகளை செய்தார்.


👉1610-ம் ஆண்டு ஜனவரியில் இவர் கண்டுபிடித்த தொலைநோக்கிகளின் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களை கண்டறிந்தார். அவை வியாழனை மையம் கொண்டு நகர்கிறது என்று அவர் கண்டுபிடிக்க சில நாட்களை எடுத்துக்கொண்டார்.


வியாழனின் துணைகோள்கள் கண்டுபிடிப்பு :


👉கலிலியோ வியாழனுக்கு அருகில் சில நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த 'நட்சத்திரங்கள்' வியாழனுடன் ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார். ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார்.


👉அடுத்தடுத்த நாட்களில் அவற்றில் ஒன்று மறைந்துவிட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.


👉ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்க வேண்டும் என்பதை அவர் கண்டார். அடுத்த சில தினங்களில் நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார்.


👉பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலாக்களையும் கலிலியன் நிலாக்கள் என்று பெயரிட்டனர். இந்த நிலாக்கள்


👉ஐஓ (Io)


👉ஐரோப்பா (Europa)


👉கேனிமெட் (Ganymede) மற்றும்


👉கால்லிஸ்டோ (Callisto) என்று அழைக்கப்படுகின்றன.


👉இவர் கண்டுபிடித்த திசைக்காட்டியும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது.


👉இது மட்டுமின்றி பல வானியல் நிகழ்வுகளை இவர் தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்து உறுதிபடுத்தினார்.


👉1610ஆம் ஆண்டு வெள்ளி, நிலவுபோல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும், மறைவதையும் கண்டார்.


👉மேலும், சனி கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார். ஆனால், அவர் அதை வேறொரு கிரகமாக தவறாக கணித்து கொண்டார், பின்னர் அது சனி கோளை சுற்றியுள்ள வளையம் என்று கண்டறிந்தார்.


👉பின்னர் நெப்டியூன் கோளை கண்டறிந்தார். ஆனால், அதை அவர் நட்சத்திரம் என எண்ணினார்.


👉'சந்திரன் மிருதுவான உருண்டை வடிவப்பந்து' என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. 'சந்திரனின் மேற்பரப்பு கரடுமுரடானது, மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்தது' என்று தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்து சொன்னார் கலீலியோ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021