ஜாக்மா (JACK MA) (ALIBABA)

 


பெயர் : ஜாக்மா

பிறப்பு : 10-09-1964

இடம் : சீனா

வகித்த பதவி : அலிபாபா நிறுவனர்



வரலாறு:-ஜாக்மா !!

👉உருவத்தையும், வெளித்தோற்றத்தையும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பார்கள். ஒரு வகையில் அது உண்மை தான்.


👉ஒல்லியாக இருப்பவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் என எண்ணக்கூடாது. அதுபோல பலசாலியாக இருப்பவர்கள் எல்லாம் பலம் வாய்ந்தவர்கள் என எண்ணக்கூடாது.


👉நாம் எப்படி இருந்தால் என்ன? நம் இலட்சியமும், குறிக்கோளும் சரியாக இருந்தால் போதும்... வாழ்வின் உயரத்தை அடைந்து விடலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர் தான் ஜாக்மா.


👉யார் இந்த ஜாக்மா என யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? இவர் சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய அலிபாபா ஆன்லைன் வர்த்தகத்தின் நிறுவனரும் ஆவார்.


👉உலகின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் தான் அலிபாபா. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாக்மா, எப்படி தொழில்துறையில் சக்தி வாய்ந்த மனிதர் ஆனார்?


👉ஜாக்மா, 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சீன நாட்டின் ஹாங்சோ நகரில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது குழந்தை பருவத்தில் கம்யூனிசம் நாட்டில் உச்சக்கட்ட நிலையில் இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் மேற்கத்திய உலகத்தோடு சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தனர். இது அவரது ஆர்வத்தை அதிகரித்ததால் புதிய திறன்களை பெற குழந்தை பருவத்திலிருந்தே முயன்று வந்தார். ஜாக்மா, ஆங்கிலம் பேச சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்தார்.


👉1972ஆம் ஆண்டு முதல் ஜாக்மாவின் ஊரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்த ஜாக்மா ஆங்கிலத்தில் பாடம் கற்க வேண்டும் என்பதற்காக சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றினார். இவர் கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். இதன்மூலம் இவருக்கு பல வெளிநாட்டு நட்புகளும் கிடைக்க அது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.


👉ஜாக்மா சற்று குள்ளமானவர். அதுமட்டுமின்றி மிக ஒல்லியான தேகத்தை கொண்டவர். இதனால் பிறர் ஏளனம் செய்வதால் இவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவானது. ஆனால், இவரிடம் போராடும் குணம் இயல்பாகவே இருந்தது.


👉இவரின் பள்ளிப்பருவம் மிகவும் போராட்டமாக இருந்தது. ஆரம்பப்பள்ளியில் இரண்டு முறை பரீட்சையில் தோற்று, பின் மூன்றாவது முறை தான் வெற்றி பெற்றார். அதன்பின் நடுத்தர வகுப்பில் மூன்று முறை தோற்று அதன்பின் தான் வெற்றி கண்டார். பள்ளிப்படிப்பை முடித்த ஜாக்மா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார். ஆனால், அதிலும் அவருடைய விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. தன் விடாமுயற்சியால் நான்காவது முறை வெற்றி பெற்று B.A ஆங்கிலத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதன்பின் ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் நுழைய விரும்பி விண்ணப்பித்தார். ஆனால், இதிலும் 10 முறைக்கும் மேல் நிராகரிக்கப்பட்டார். பின்னாளில் அதே யுனிவர்சிட்டி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தபோது இவர் இந்த கதையை அங்கு சொல்லியிருக்கிறார்.


👉ஜாக்மா பல வேலைகளுக்கு முயற்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது விதமான வேலைகளுக்கு முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதில் காவல்துறை உள்பட பலரும் அவரை நிராகரித்தார்கள். இச்சமயத்தில் இவரது ஊரில் KFC வேலைக்கு ஆள் எடுத்தார்கள். ஜாக்மா உட்பட நேர்முகத்தேர்வில் 24 பேர் கலந்து கொண்டார்கள். அதில் இவர் ஒருவரை தவிர மற்ற 23 பேரை வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், இவர் மனம் தளராமல் தனக்கான அடுத்த முயற்சியை தேட தொடங்கினார்.


👉அதன்பின் 1996ஆம் ஆண்டு நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றார். அங்குதான் இணையம் பற்றி அறிந்தார். சரி, இண்டர்நெட்டில் எதையாவது தேடி பார்க்கலாம் என எண்ணிய ஜாக்மா முதலில் தேடிய வார்த்தை 'பீர்". பீர் என டைப் செய்து தேடியதும் எல்லா நாட்டு பீர்களும் வந்தன, சீனாவை தவிர. அதன் பின் சீனா சென்ற ஜாக்மா, தனது நண்பர்கள் மூலம் 20,000 டாலரை சேர்த்து இணையம் சார்ந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் பிற நிறுவனங்களுக்கு வெப்சைட் உருவாக்குவதே இவரின் வேலை. மூன்று வருடங்களில் ஜாக்மா 8,00,000 டாலர்களை சம்பாதித்து காட்டினார்.


👉1999ஆம் ஆண்டு அலிபாபாவின் துவக்கம் ஆரம்பித்தது. தனது திறன்வாய்ந்த குழுவுடன் அலிபாபா என்னும் ஆன்லைன் வர்த்தகத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இக்குழுவில் 17 பேர் மட்டுமே இருந்தனர்.


நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.


👉நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது ஜாக்மாவிற்கு, அரேபியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் அலிபாபா ஞாபகம் வருகிறது. நல்ல பெயராக இருக்கிறதே என்று யோசித்தார். அச்சமயத்தில் அவரின் டேபிளுக்கு உணவு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம் உனக்கு அலிபாபா பற்றி தெரியுமா? என கேட்டார். அப்பெண்ணோ, தெரியுமே!! திறந்திடு சீசேம் என்று சொல்வாரே அவர் தானே அலிபாபா என்றார். அதன்பின் ஜாக்மாவிற்கு புது நம்பிக்கை பிறந்தது. இன்னும் பலரிடம் அலிபாபாவை பற்றி தெரியுமா? எனக் கேட்டார். எல்லோருக்கும் அலிபாபாவை பற்றி தெரியும் என கூறினர். உலகம் அறிந்த சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளோம் என முடிவு செய்தார். அதன்பின் தான் Alibaba என்னும் பெயரை தேர்ந்தெடுத்தார்.


👉அலிபாபா துவக்கத்தின் ஆரம்பத்திலிருந்தே சீன வர்த்தகத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 2000ஆம் ஆண்டு ஜனவரியில் 25 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. அதன்பிறகு எந்த பெரிய முதலீடும் கோராமல் அசுர வளர்ச்சி அடைந்தது.


👉ஹாங்காங் பங்குச்சந்தையில் நுழைய அலிபாபா அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஹாங்காங் சந்தையில் கிடைக்காத அனுமதி அமெரிக்க பங்குச்சந்தையில் கிடைத்தது. வெறும் 12�

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021