LICன் புதிய காப்பீட்டு திட்டம் ரூ.28 லட்சம் முதிர்வு தொகைக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்.. !
எல்ஐசியின் அசத்தல் திட்டம்.. ரூ.28 லட்சம் முதிர்வு தொகைக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்.. !
இன்சூரன்ஸ் என்றாலே நமக்கு நியாபகம் வருவது என்ன? எல்ஐசி தான். அந்தளவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் பிரபலமானவை.
மேலும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதால் நம்பகத்தன்மை உள்ள ஒரு நிறுவனமாகும்.
இன்சூரன்ஸ் என்றாலே பொதுவாக அவசர காலத்தில் உதவும் ஆபத்பாந்தவானாக இருக்கும். அந்த வகையில் எல் ஐ சி பல வகையான திட்டங்களை வழங்கி வருகின்றது.
ரைடர் பாலிசி
ரைடர் பாலிசி வசதியுண்டா?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டமாகும். இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும். இது விபத்து காப்பீடு மற்றும் செயல்திறன் இழப்புக்கு ரைடர் பாலிசி வசதியும் உண்டு.
கடன் வசதி
கடன் வசதி
கடன் வசதியும் உண்டு
இந்த பாலிசி எடுத்து மூன்று வருட பிரீமியங்கள் செலுத்திய பிறகு கடன் வசதியும் உண்டு.
அதே போல மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு சரண்டர் செய்தும் கொள்ளலாம்.
வரி சலுகை
வரி சலுகை
வரிசலுகை உண்டா?
வருமான வரி பிரிவு 80C - சின் படி சலுகை உண்டு. முதிர்வு தொகைக்கும் 10(10-D) -யின் கீழ் வரி விலக்கு உண்டு.
குறைந்தபட்ச வயது தகுதி 12 வயது, அதிகபட்ச வயது தகுதி 45 வயது ஆகும். பாலிசி முதிர்வுகாலம் அதிகபட்சம் 65 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசியின் காலம் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் ஆகும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசியில் ரைடர் பாலிசி எடுக்க வயது 18 ஆகும்.
எவ்வளவு
எவ்வளவு
எவ்வளவு க்ளைம்?
இந்த பாலிசிக்கு தினசரி 200 ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் 28 லட்சம் ரூபாய் க்ளைம் செய்ய முடியும். கூடுதலாக இந்த திட்டத்தில் 15,000 ரூபாய் பென்ஷனும் கிடைக்கும்.
இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீடு தொகை 1.5 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு இல்லை.
முதிர்வு பயன்
முதிர்வு பயன்
முதிர்வு பயன் எவ்வளவு?
காப்பீட்டு பயன் (SA) + போனஸ் + இறுதி கூடுதல் போனஸ் அனைத்தும் சேர்ந்ததாக இருக்கும்.
உதாரணத்திற்கு : 30 வயதில், 20 வருட காலம். முதிர்வு தொகை 10 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், வருட பிரீமியம் 50,667 ரூபாயாகும். வருடாந்திரா போனஸ் (yearly bonus) 8 லட்சம் ரூபாயாகும். இறுதி கூடுதல் போன்ஸ் (FAP) - இது 1000 ரூபாய்க்கு 70 ரூபாயாகும். மொத்தம்.
Age: 30 years
SA: Rs.10,00,000
Yearly premium: Rs.50.667
Yearly bonus: Rs.8,00,000 (Rs.40 per thousand SA pa)
FAB: Rs.70,000 (Rs.70 per thousand SA)
Toal returns - Rs.18,70,000
இறப்பு பயன்
இறப்பு பயன்
விபத்து பலன்
தவணை தொகையை மாதம், அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை, SSC/ECS என கொடுக்கலாம்.
இதில் விபத்து காப்பீடாக குறைந்தபட்சம் 10,000 ரூபாயும், அதிகபட்சம் 1 கோடி ரூபாயும் க்ளைம் செய்ய முடியும். இதில் இறப்பு பலனாக அடிப்படை காப்புத் தொகை + போனஸ் -ம் கிடைக்கும்.
பயன்கள்
பயன்கள்
திட்டத்தின் முக்கிய பயன்கள்
0 - 5 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் - 100%
6 - 10 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் - 125%
11 - 15 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் - 150%
16 - 20 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் - 200%
தள்ளுபடி
தள்ளுபடி
பிரீமிய தள்ளுபடி
நீங்கள் இந்த பாலிசியில் செலுத்தும் பிரீமியம், தொகையானது ஆண்டு பிரீமியமாக தேர்த்தெடுத்தால், உங்களது பிரீமியத்தில் 2% தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் 1% பிரீமியமும் கிடைக்கும்.
பிரீமியம்
பிரீமியம்
பிரீமியம் கணக்கு
உதாரணத்திற்கு முதிர்வு தொகை ரூ.2 லட்சம் எனில் - 12 வயதில் (ரூ.9663) - 20 வயதில் ரூ.9,741), 30 வயதில் (ரூ.9947), 40 வயதில் (ரூ.10662) பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
முதிர்வு தொகை ரூ.5 லட்சம் எனில் - 12 வயதில் (ரூ.23,157) - 20 வயதில் ரூ.23,353), 30 வயதில் (ரூ.23,868), 40 வயதில் (ரூ.25,656) பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக