Neeraj Chopra | தங்கப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.. டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் சாதனை!

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

         டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார்.

சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். முன்னதாக அபினவ் பிந்த்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றில் ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர். நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டரும், மூன்றாம் சுற்றில் 76.79 மீட்டரும் ஈட்டி வீசினார்.

நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்று போட்டிகளில் 86.65 மீட்டர் வீசி நேரடியாக இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா
இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் இருந்தே நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றிருந்தார். இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் வீசியதன் மூதல் முதல் சுற்றில் பெற்றிருந்த முன்னிலையை அவர் மேலும் அதிகப்படுத்தினார். நீரஜ் சோப்ராவுக்கு செக் குடியரசின் Vitezslav Vesely (85.44மீ) , ஜெரிமனியின் Julian Weber (85.30 மீ) ஆகியோர் சவால் அளித்தனர். பாகிஸ்தானின் நதீம் அதிகபட்சமாக 84.62 மீ வீசினார்.

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2017ல் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தவர் நீரஜ் சோப்ரா.

*✍🏼 தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசுத் தொகை*

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பரிசுத் தொகைகளை அறிவித்து வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இதுதவிர பிசிசிஐ பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகைகளை அறிவித்துள்ள நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடியை அறிவித்துள்ளது.

முன்னதாக ஹரியாணா மாநில அரசு ரூ.6 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021