ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (OMANTHUR RAMASAMY REDDIYAR)



பெயர் : ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

பிறப்பு : கி.பி 1895

இறப்பு : 25-08-1970

இடம் : ஓமந்தூர், தென் ஆற்காடு, சென்னை, தமிழ்நாடு

வகித்த பதவி : வழக்கறிஞர், எழுத்தாளர், ஆட்சியாளர், அரசியல்வாதி



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது.


முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். 25-8-1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021