ப. சுப்பராயன் (P.SUPPARAYAN)
பெயர் : ப. சுப்பராயன்
இயற்பெயர் : பரமசிவ சுப்பராயன்
பிறப்பு : 11-9-1889
இறப்பு : 06-10-1962
பெற்றோர் : பரமசிவம், பாவாயி
இடம் : குமரமங்கலம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
வகித்த பதவி : முதலமைச்சர், இந்திய அரசியல்வாதி, சுதந்திர போராளி மற்றும் தூதுவர், வழக்கறிஞர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
பரமசிவ சுப்பராயன், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு குமரமங்கலத்தில் பிறந்தார். இவரது தந்தை குமரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர். தாயார் பெயர் பாவாயி. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் (LLD) பெற்றார். 1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
பரமசிவ சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார். இவர் ஏப்ரல் 1962 இல் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சுப்பராயன் பதவியில் இருக்கும் போதே அக்டோபர் 6, 1962 இல் மரணமடைந்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக