புதுச்சேரி மாவட்டம் (PUTHUCHERI DISTRICT)



  புதுச்சேரி ஒன்றியப் பகுதி தற்போது பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன. இம்மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது.


புதுச்சேரி  மாவட்டம்


புதுச்சேரி மாவட்டம் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். முன்னதாக பாண்டி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது. பின்னர் புதுவை என்று அழைக்கப்படுகிறது.



புதுச்சேரி மாவட்டம் 290 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 735,332 ஆகும்.



புதுவை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்


1. புதுவை 


2. உழவர்கரை 


3. வில்லியனு}ர்


4. பாகூர்


நிர்வாகக் கோட்டங்கள் :


புதுச்சேரி மாவட்டத்தில், ஒழுக்கரை வட்டத்தில் ஊரகப் பகுதிகள் எதுவும் இல்லை. மற்ற மூன்று வட்டங்களின் ஊரகப் பகுதிகள் மேலும் கம்யூன் பஞ்சாயத்துக்கள் (ஊP) அல்லது கம்யூன்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வட்டத்தின் ஊரகப் பகுதிகள் ஒரே கம்யூனாக, அரியாங்குப்பம் கம்யூனாக உள்ளன. வில்லியனு}ர் வட்டத்தில் இரண்டு கம்யூன்கள் உள்ளன. வில்லியனு}ர் கம்யூன், மண்ணடிப்பேட்டை கம்யூன். பாகூரில் உள்ள இரு கம்யூன்கள் பாகூரும் நெட்டப்பாக்கமும் ஆகும்.



2011 கணக்கெடுப்பு ஏற்கனவே உள்ள மூன்று நகரங்களைத் தவிர மூன்று பகுதிகளை நகரங்களாக கண்டறிந்துள்ளது. புதுச்சேரி மற்றும் ஒழுக்கரை இரண்டும் நகராட்சிகளாகும். குரும்பப்பேட்டை ஒரு சிற்று}ர் பஞ்சாயத்தாகும். கணக்கெடுப்பின்படியான நகரங்கள்@ அரியாங்குப்பம், மனவெலி மற்றும் வில்லியனு}ராகும்.



நிர்வாக வசதிக்காக, புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, புதுச்சேரி மாவட்டத்தை இரு உட்கோட்டங்களாகப் பிரித்துள்ளது. புதுச்சேரி வடக்கு மற்றும் புதுச்சேரி தெற்கு. புதுச்சேரி வடக்கு உட்கோட்டத்தில் புதுச்சேரி மற்றும் ஒழுக்கரை வட்டங்கள் உள்ளன. புதுச்சேரி தெற்கு உட்கோட்டத்தில் மற்ற இரு வட்டங்களான வில்லியனு}ரும் பாகூரும் உள்ளன. இந்த நான்கு வட்டங்களும் மேற்படியாக வருவாய்த்துறை வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.



வழிப்பாட்டுத் தலங்கள் :


அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி :



மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும். கோவிலின் உட்பகுதியின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ணப்படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும். கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டுள்ளது.


தங்க தேர் :


தங்க தேர் பக்தர்கள் நன்கொடைகள் சேகரிப்பு அடிப்படையில் முற்றிலும் செய்யப்பட்டது. இந்த தேர் பயன்படுத்தப்படும் தங்கம் மொத்த எடை சுமார் 7.5 கிலோ, மதிப்பீடு ரூபாய் 35 லட்சம் மூலம் ஆகும். தேரின் உயரம் 10 அடி அகலம் 6 அடி ஆகும். மணக்குள விநாயகர் கோவில் தங்க தேர் 2006ஆம் ஆண்டு உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தங்க தேர் பவனி ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று மேல தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.


திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில் :


சுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 49ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் மேடு.


தலவரலாறு :


பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.


திருத்தௌpச்சேரி பார்வதீசுவரர் கோயில் :




திருத்தௌpச்சேரி கோயிற்பத்து பார்வதீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 50வது சிவத்தலமாகும்.



சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது என்பது தொன்நம்பிக்கை. தவம் செய்வதற்கு உகந்த இடம் எனப்படுகிறது.



இக்கோயிலில் உள்ள இறைவன் பார்வதீசுவரர், இறைவி பார்வதியம்மை. இங்குள்ள மூலவர் லிங்கம், பிரமலிங்கம், மகாலிங்கம், ராஜலிங்கம், பாஸ்கர லிங்கம் என்று பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.



தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில் :



தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.



சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.



திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலமாகும்.



அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் :



புதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஊர் வீராம்பட்டினம். இந்த ஊரில்தான் செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் உள்ளது.


கோயில் சிறப்பு :


இங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர். இங்கு தேர்த்திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து விழாவை தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இந்த செங்கழுநீர் அம்மனை பரதவர் இனமே வணங்கி வழிபட்டு மகிழ்ந்தது. பின்னர், தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் அமைக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள பல பரம்பரைகள் செங்கழுநீர் அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.



இந்த அம்மனை மனமுருகி வேண்டும் பக்தர்களின் அனைத்து குறைகளும் தீர்ந்து விடுகிறது. குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பௌர்ணமி தினத்தில் இங்கு வந்து தங்கி பிரார்த்தனை செய்தால் கண்பார்வை நிச்சயம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கும், திருண தடை நீங்கவும் இங்குள்ள கடலில் குளித்து விட்டு அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார்.



தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி :



தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலு}ர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (ளயn pயரட) கோவில் என அழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின் கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


வரலாறு :


இயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689-ல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லு}யி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே, டச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699-ல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736 வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761-ல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.



1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன், 1791ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து, ஆயர் செம்பெனோயிஸால் இவ்வாலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது. இவ்வாலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021