மேயர் டி. செங்கல்வராயன் (SENGALVARAYAN)



பெயர் : மேயர் டி. செங்கல்வராயன்

பிறப்பு : கி.பி 1908

பெற்றோர் : மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள்

இடம் : திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு

வகித்த பதவி : சென்னை நகர மேயர், அரசியல்வாதி


வரலாறு:-வாழ்க்கை வரலாறு

டி. செங்கல்வராயன் விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும், குறிப்பிடத்தக்க மேடைப்பேச்சாளருமாவார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூருக்கு அருகேயுள்ள தண்டலத்தில் பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். சென்னை கிருத்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பும், பம்பாயில் சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 ஆவது வயதில் மணம் புரிந்தார். 27 வயதில் காங்கிரசில் சேர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் சத்தியமூர்த்தி இருந்தபோது, இவர் செயலாளராக இருந்தார். பின்னர் தலைவரானார். 1939–1940 இல் தனிநபர் சத்தியாகிரகம் நடைபெற்றபோது 4 மாதங்களாகச் சென்னையிலும், அலிப்பூரிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் தீவிர அரசியலிருந்து விலகினார். பேச்சுக்கலை, ரஷ்ய வெளியுறவுக் கொள்கை, இந்திய வெளியுறவுக் கொள்கை ஆகியவை குறித்து நூல்கள் எழுதியுள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது பேசியவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.


வகித்த பதவிகள்: 


சென்னை நகர மேயர் (1952)


மாநிலங்களவை உறுப்பினர் (1964–72)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021