எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் (S.KASTHURI RANGA AYYANAR)
பெயர் : எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார்
பிறப்பு : 15-12-1859
இறப்பு : 12-12-1923
பெற்றோர் : சேஷ ஐயங்கார்
இடம் : கும்பகோணம், தமிழ்நாடு
வகித்த பதவி : அரசியல்வாதி, பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், ஹிந்து நிர்வாக இயக்குனர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
பிறப்பு
கஸ்தூரி ரங்கன், கும்பகோணம் அருகேயுள்ள இன்னாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷ ஐயங்காருக்கு மூன்றாவது மகனாக 15.12.1859-ல் பிறந்தார். சேஷ ஐயங்கார் குடும்பத்தினர் விஜயநகர சாம்ராஜ்யத்திலும் தஞ்சை மராட்டிய அரசிலும் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். இன்னாம்பூரிலும் கபிஸ்தலத்திலும் பின்னர் கும்பகோணத்திலும் படித்தார். 1879 -ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கஸ்தூரி ரங்கன் பட்டம் பெற்றார். 1881-ல் சார்பதிவாளர் பணியில் சேர்ந்தார்.
பிறகு, சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் 1884-ல் சட்டக் கல்வி முடித்தார். வழக்கறிஞரானதும் கோவையை நோக்கி நகர்ந்தார் கஸ்தூரி ரங்கன். அங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டாகவும், சிறையைப் பார்வையிடும் சிறப்புப் பார்வையாளராகவும் ஆட்சியரால் நியமிக்கப்பட்டார். அந்நாளில் ‘தி இந்து’ வின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் 1902-ல் ஓய்வுபெற்றார். அந்த பத்திரிக்கைக்கு, கஸ்தூரி ரங்கன், தி இந்து பத்திரிக்கையின் சட்ட ஆலோசகராக மட்டுமல்லாமல், அதில் கட்டுரைகளை எழுதிவருபவராகவும் இருந்தார்.
தி இந்து பத்திரிக்கை கடனில் மூழ்கியது. அப்போது ‘தி இந்து’ தொடர்ந்து வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தவர் அதன் கட்டிடம், அச்சகம் உட்பட அனைத்தையும் விலைக்கு வாங்கி 1.4.1905-ல் நாளிதழின் உரிமையாளர், ஆசிரியரானார். எஸ். கஸ்தூரி ரங்கா ஐயங்கார் ஒரு இந்திய வழக்கறிஞராகவும், இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும், அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளராகவும் இருந்தார், இவர் டிசம்பர் 1923 இல் அவரது இறப்பு வரை 1 ஏப்ரல் 1905 முதல் தி இந்துவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர் முழக்கமாகச் செயல்பட்டாலும் ‘தி இந்து’ அரசாங்கத்தை விமர்சிப்பதில் சார்புத் தன்மையற்றதாக நேர்மையாகச் செயல்பட்டது. பத்திரிகைப் பணிக்குச் சமமாக தேச விடுதலைப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். ஒருபுறம் சட்டம் - ஒழுங்கைச் சீர்திருத்தியதற்காகவும் சட்டப்படியான ஆட்சி நடப்பதற்காகவுமான மதிப்பை ஆங்கிலேயர்களுக்கு ‘தி இந்து’ அளித்தது. கஸ்தூரி ரங்கனின் இந்த இயல்பு இந்தியப் பத்திரிகை உலகில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய நாளிதழாக ‘தி இந்து’வை வளர்த்தெடுத்தது.
இடைவிடாத பத்திரிகைப் பணி, தேச விடுதலைப் போராட்டப்பணி, பல்வேறு சமூகப் பணி என ஓடிக்கொண்டிருந்த கஸ்தூரி ரங்கன் நோயில் விழுந்தார். அன்றாடம் செய்தித்தாள் படித்து, ஆசிரியர் குழாமுக்கு வழிகாட்டுக் குறிப்புகளை வீட்டிலிருந்தே எழுதி அனுப்பினார். கஸ்தூரி ரங்கா ஐயங்கார் டிசம்பர் 12, 1923 இல் தனது 64 வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக