சாக்ரடீஸ் (SOCRATES)

 

பெயர் : சாக்ரடீஸ்

பிறப்பு : கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு

இடம் : ஏதென்ஸ்

வகித்த பதவி : தத்துவஞானி


வரலாறு:-தத்துவஞானிகளின் தந்தை!!

⭐இன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒளிமயமான உலகம், ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது.


⭐அந்த அறியாமை இருட்டை, கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து, கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தார் ஒரு சரித்திர நாயகன்.


⭐அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர்.


⭐நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர்.


⭐வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் கொண்டிருந்தவர். அவர்தான் தத்துவஞானி சாக்ரடீஸ்.


⭐மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. 


⭐வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர்.


⭐உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவர்தான் சாக்ரடீஸ்.


⭐சாக்ரடீஸ் கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தினார்.


சாக்ரடீஸின் ஆரம்ப கால வாழ்க்கை...!!


⭐தனக்கு முன்னாள் இருந்த தத்துவஞானிகள் மரத்தையும், கல்லையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, மனிதனின் மனதை ஆராய்ந்தவர் சாக்ரடீஸ்.


⭐மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை எழுப்பியவர் சாக்ரடீஸ்.


யார் இவர்?


⭐சாக்ரடீஸ் ஏதென்ஸை சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராவார்.


⭐சாக்ரடீஸ் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கிரேக்க நகரமான ஏதென்ஸ்-ல் பிறந்தார். இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. இவரது தந்தையார் ஒரு சிற்பி.


⭐சாக்ரடீஸ் இளம் வயதிலேயே சிலைகளை வடிக்கக் கற்றார். இந்தப் பயிற்சிதான் பிற்காலத்தில் அவருக்கு அறிவை செதுக்க உதவியது. கேள்வி எனும் உளியால் தேவையற்ற பகுதிகளான மூட கருத்துக்களை செதுக்கி நீக்கினால், பகுத்தறிவு எனும் உண்மையின் சிலை உருவாகிவிடும் என்பதை சாக்ரடீஸ் நடைமுறை பயிற்சியிலேயே தெரிந்து கொண்டார்.


⭐உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார்.


கேள்விகேட்கும் திறன் :


⭐சாக்ரடீஸுக்கு கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் இருந்தது. ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார்.


⭐எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும்.


⭐நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களை சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார்.


⭐சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார். எதையும் வித்தியாசமாகவும் சிந்தித்தார். அவரது சிந்தனைகள் அந்த காலக்கட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது.


சாக்ரடீஸ் ஒரு எளிய மனிதர்!!


⭐சாக்ரடீஸ், தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது மற்றும் அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார்.


⭐அப்போது அங்கே வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிடும். என்ன தேடுகிறீர்கள்? என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனதில் விதைப்பார்.


⭐மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார். ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோவில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டு திடல்களில், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார்.


⭐'கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அறிவினால் சீர்தூக்கி பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்' போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.


⭐மற்றவர்கள் சாக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடமே திரும்ப கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலை கேட்டு, அந்தப் பிரச்சனையை எழுப்பியவர்களே காரணத்தை புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.


⭐இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர். மேலும், பிரச்சனையை புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர்.


⭐சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களை சிந்திக்க வைத்தது. மேலும், செயல்களில் ஈடுபடவும் அவர்களை தூண்டியது.


⭐அக்கால வழக்கப்படி அவர் தன் தாய் நாட்டுக்கு சேவை செய்ய போருக்கு செல்ல வேண்டியிருந்தது. ராணுவத்தில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தார். ஒரு சூழ்நிலையில் அவர் ராணுவப் பணியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.


⭐சாக்ரடீஸ் மிகவும் எளிமையானவர். ஒரே ஒரு ஆடையுடன், கால்களில் செருப்பின்றி பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்து அறிவை பரப்பினார். மக்கள் கூடும் இடங்களிலும், இளைஞர்கள் கூடும் இடங்களிலும் அவர் பேசினார்.


⭐சாக்ரடீஸ் அடிக்கடி கடைவீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார். ஆனால் எதையும் அங்கு வாங்கியதில்லை.


⭐ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர், 'எதையுமே நீங்கள் வாங்குவதில்லை, அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருட்களை பார்வையிடுகிறீர்கள்' என்று வியப்புடன் கேட்டார்.


⭐அதற்கு சாக்ரடீஸ், 'கடைவீதிக்கு அடிக்கடி நான் போக விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான பொருட்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத்தான்' என்று பதிலளித்தார்.


சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை :


⭐போர் வீரராக, சிற்பியாக இருந்த சாக்ரடீஸூக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மெர்ட்ரான். இவர் அமைதி, பண்பு, அடக்கம் ஆகிய பண்புகளுக்கு உறைவிடமாக இருந்தார். இவருடன் வாழ்ந்த வாழ்க்கை சாக்ரடீஸூக்கு மகிழ்ச்சிகரமாகவே இருந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.


⭐மெர்ட்ரான் தனது கணவர் தெருக்களில் நின்று பேசுவதையும், மனம்போன போக்கில் போவதையும் கண்டு மனம் வருந்தவில்லை. மாறாக தனது கணவர் சிறந்த அறிவாளி என்று பெருமிதம் கொண்டார். ஒருநாள் எதிர்பாராத விதமாக மெர்ட்ரான் இயற்கை எய்தவே மகிழ்ச்சியும் சாக்ரடீஸை விட்டு பிரிந்தது.


⭐இதனால் சாக்ரடீஸ் மனமுடைந்து போனார். தாயில்லா குழந்தைகளை பேணி காத்திட வேண்டி சாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.


⭐சாந்திப்பி, மெர்ட்ரானின் எண்ணத்திற்கு நேர்மாறாக இருந்தார். தன் கணவரை மதிக்க தவறினாள். சாந்திப்பி, தனது கணவரின் கருத்துக்களையும், சொற்பொழிவுகளையும் வீண் வெட்டிப்பேச்சு என்று கடிந்து கொள்வாள். அதுமட்டுமல்லாமல் அவரது அறிவுரைகளையும், சொற்பொழிவுகளையும் கேட்போரை வீணர்கள் என்று ஏளனம் செய்தாள்.


⭐சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக்கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. அதனால் பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார்.


⭐ஆனால், அவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். அதனால், கணவரை திட்டிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.


⭐பொறுமை இழந்த அவரது மனைவி கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். பின் மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸின் தலையில் ஊற்றினார்.


⭐அப்போது அவர், 'அடடா, என்ன ஆச்சரியம்... சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!' என்று சர்வ சாதாரணமாக கூறினார்.


⭐மனைவியால் அவமானபட்ட நிலையிலும், சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.


⭐சாக்ரடீஸூக்கு மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அவரிடம் அனுசரித்து போக பழகிக் கொண்டார்.


சாக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டு!!


⭐சாக்ரடீஸின் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களை கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021