ஶ்ரீ. ஶ்ரீ. ரவிசங்கர் (SRI. SRI. RAVISANKAR)
பெயர் : ஶ்ரீ. ஶ்ரீ. ரவிசங்கர்
பிறப்பு : 13-05-1956
பெற்றோர் : ஶ்ரீ.ஶ்ரீ. வேங்கட ரத்னம், விசாலாட்சி
இடம் : பாபநாசம், தமிழ்நாடு
வகித்த பதவி : ஆன்மீக தலைவர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
ஶ்ரீ.ஶ்ரீ. ரவிசங்கர், ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஶ்ரீ.ஶ்ரீ.என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஶ்ரீ. ஶ்ரீ. வேங்கட ரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார். இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்று கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.
இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்தார். அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கினார். பிற்காலத்தில் அவரது பெயரான ரவிசங்கருடன் ஶ்ரீ ஶ்ரீ என்கிற பெயரையும் சேர்த்துக்கொண்டார். ஏனெனில், ரவிசங்கர் என்கிற சித்தார் வல்லுநர் தனது பெயரால் குரு பயன் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
1982 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் 10 நாள்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு இவர் ‘சுதர்ஷன் க்ரியா’ என்கிற ஒரு தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். ஒரு நேர் காணலில் அவர் இந்த பயிற்சி தனக்கு ஒரு ‘பாடல் அல்லது உத்வேகம்’ போல் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: ‘ஒவ்வொரு உணர்வும் மூச்சின் ஒவ்வொரு லயத்துடன் தொடர்புடையது. எனவே மூச்சை சமன் செய்வது துன்பத்தைக் குறைக்க உதவும்’
சங்கர் 1982 ஆம் ஆண்டு ‘வாழும் கலை’ நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய்லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் ‘மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுவுமே’ ஆகும்.
சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் ஆற்றலைப் புகுத்தி, உடல், மனம் மற்றும் உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களைச் சமன் செய்யக் கூடியதாகக் கருதப்படுகிறது. இதன் பலன்களைப் பற்றி பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத் தவிர வாழும் கலை நிறுவனம் தியானம் மற்றும் குழு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. ஏழ்மை மிக்க கிராம மற்றும் நகரப் பகுதிகளிலும், சிறைச் சாலைகளிலும் கூட சில பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறது. வாழும் கலை நிறுவனம் பயிற்சிகள் அளிப்பதுடன், சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக