Tokyo Olympics | மல்யுத்தத்தில் வெள்ளி- ரவிக்குமார் தாஹியாவின் சாதனைப் பயணம் தொடங்கியது எப்போது?


மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 5-வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவிக்குமார் தாஹியா

மல்யுத்தத்திற்கு பெயர் போன ஹரியானா மாநிலத்தில் உள்ள நாஹ்ரி கிராமத்தில் 1997-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்தார் ரவவிகுமார் தாஹியா. இவரது தந்தை ராகேஷ் குமார், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். 10 வயதில் இருந்து மல்யுத்த கோதாவில் பயிற்சி பெற்று வரும் ரவிக்குமாருக்கு நாஹ்ரியில் இருந்து தினமும் பால், பழம், பாதம் பருப்புகளை கொண்டு செல்வாராம் இவரது தந்தை. ஒருநாள் அல்ல இரு நாள் அல்ல ஏறத்தாழ 10 ஆண்டுகள் மகனுக்கான உணவை வீட்டில் மைதானத்திற்கு கொண்டு சென்றுள்ளார் இந்த பாசக்கார தந்தை. ரவிக்குமாரின் உடல் வலுவிற்கு தந்தையில் இந்த டயட் முறைதான் முக்கிய காரணம்


2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில்குமார் வெள்ளி வென்றதை பார்த்து தானும் ஒருநாள் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என ரவிக்குமார் முடிவு செய்தார். சுஷில் பயிற்சி செய்த சத்ரசால் மைதானத்தில் தான் இவரும் பயிற்சி மேற்கொண்டா


2015-ல் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 55 கிலோ பிரிவில் கலந்துகொண்டு வெள்ளி வென்றதன் மூலமாக இவரது திறனை வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து 2019-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இவர், ஐரோப்பிய சாம்பியன் அர்சென் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன் யுகி தகாஹாஷியை தோற்கடித்தார். இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றதுடன் டோக்யோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார்


அதோடு டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். இதே ஆண்டு இந்தியாவில் நடந்த மல்யுத்த புரோஃபஷ்னல் லீக் போட்டியில் ஹரியானா சார்பில் பங்கேற்றார். களத்தில் யாவராலும் அசைக்க முடியாத வீரராகவும் இவர் திகழ்ந்தா


2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரவிக்குமார் தாஹியா அடுத்தடுத்து தங்கம் வென்று அசத்திய இருந்தார். ரஷ்யாவில் பயிற்சியை முடித்த கையோடு டோக்யோ வந்த இவர், பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021