இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடைபயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

படம்
  *Bioclock என்றால் என்ன?*  நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.  நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.  50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.  அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.  சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.  எனவே நண்பர்களே,  1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.  2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.  3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.  4. சு...

ஆயுஷ்மன் பாரத் யோஜனா என்றால் என்ன?

படம்
  பிரதான் மந்திரி ஜான் அரோயா அபியான் (Pradhan Mantri Jan Arogya Abhiyaan) – ஆயுஷ்மன் பாரத் யோஜனா திட்டம் (Ayushman Bharat Yojana Scheme) என்பது இந்தியாவில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். ஆயுஷ்மன் திட்டம் பொதுத்துறை சுகாதார பராமரிப்புத் துறை, உள்கட்டுமானம், நிதி மற்றும் வளங்கள் இல்லாமை உள்ளிட்ட தற்போதைய குறைபாடுகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஆயுஷ்மன் பாரத் யோஜனா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆயுஷ்மன் பாரத் யோஜனா கீழ் 100 மில்லியன் ஏழை பிபிஎல் குடும்பங்களை மத்திய அரசு நிர்ணயிக்கும் அடிப்படை நோக்கமானது இந்தியாவில் இரண்டாம்நிலை, முதன்மை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்துவது மற்றும் அனைத்து அவசர குடும்பங்களுக்கான அவசரநிலை சூழ்நிலையில் நிதி பாதுகாப்பை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ், சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம் போன்ற அரசு அறிமுகப்படுத்திய 2 முக்கிய சுகாதார முயற்சிகள் உள்ளன. ஏழை மக்களுக்கு சுகாதார தொடர்பான பிரச்சினைகளை அகற்றும் நோக்கத்துடன் இந்த 2 நாடுகளை...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

படம்
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.  எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின்...

ராமச்சந்திர நாயக்கர்

படம்
பெயர் : ராமச்சந்திர நாயக்கர் இடம் : சேந்தமங்கலம், நாமக்கல் வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர், படைத் தளபதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது. விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படுத்தி அதன்படி தென்தமிழகம், கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெறும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும், திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆ...

ஆர். கே. சண்முகம் (R.K.SHANMUGAM)

படம்
பெயர் : ஆர். கே. சண்முகம் பிறப்பு : 17-10-1892 இறப்பு : 03-05-1953 பெற்றோர் : ஆர். கந்தசாமி செட்டியார் , ஸ்ரீரங்கம்மாள் இடம் : கோயம்புத்தூர் புத்தகங்கள் : குற்றாலக் குறவஞ்சிக்கு உரை வகித்த பதவி : வழக்கறிஞர், அரசியல்வாதி வரலாறு:-வாழ்க்கை வரலாறு சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர். இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் ஆவார். 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர். வாழ்க்கைக் குறிப்பு: தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள். கோவை யூனியன் உயர...

நாகேஷ் (NAGESH)

படம்
 பெயர் : நாகேஷ் இயற்பெயர் : நாகேஸ்வரன் பிறப்பு : 27-09-1933 இறப்பு : 31-01-2009 பெற்றோர் : கிருஷ்ணாராவ், ருக்மணி இடம் : தாராபுரம் வகித்த பதவி : நடிகர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு நாகேஷ் த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். வாழ்க்கைச் சுருக்கம் :  நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப்பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம்பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புக...

மு. வரதராசனார் (M.VARATHARASANAR)

படம்
  பெயர் : மு. வரதராசனார் இயற்பெயர் : மு. வ. பிறப்பு : 25-04-1912 இறப்பு : 10-10-1974 பெற்றோர் : முனுசாமி முதலியார், அம்மாக்கண்ணு இடம் : வேலூர் வகித்த பதவி : தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் விருதுகள் : சாகித்திய அகாதமி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். வாழ்க்கைச் சுருக்கம்: மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி,வ...

Today History : 12.09.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- 👉 1609ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார். ✈ 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும். ✏ 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹாங்காங்கில், ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது. 💣 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முறையாக லியோ சிலார்ட் அறிவித்தார். முக்கிய தினம் :- தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம் 🌐 நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு-தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா.வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012இல் மாற்றப்பட்டது. பிறந்த நாள் :- சி.வை.தாமோதரம்பிள்ளை ✍ தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை 183...

சீர்திருத்தபத்திரம் *அல்லது* *பிழைத்திருத்தல் *பத்திரத்தினை* *பற்றிய சில* *தகவல்கள்.Rectification Deed

படம்
*S.முருகேசன்* 🍒🍒🍒🍒 *பத்திரம் எழுதும் போது சிலர் தவறுதலாக ஏதாவது பிழைகள் போடுவது இயல்பானது ஆனால் அதை சரி செய்ய முடியுமா என்பது தான் கேள்வி ஆம் முடியும் அது எப்படி என்ன மாதிரியான பிழைகளை திருத்த முடியும்* *நம்முடைய பததிரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம்,சீர்திருத்தப் பத்திரம்( RECTIFICATION DEED) என்றும் கூறலாம்* *செடில்மெண்ட், கிரயம் ,பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.* *நம்முடைய பத்திரத்தில்  சதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.* *பத்திரத்தில் திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்*. *பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள* *பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றா...

த. பிரகாசம்

படம்
  பெயர் : த . பிரகாசம் பிறப்பு : 23-08-1872 இறப்பு : 20-05-1957 பெற்றோர் : வெங்கட நரசிம்மன் - சுப்பம்மாள் இடம் : ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம் வகித்த பதவி : வழக்கறிஞர் , எழுத்தாளர் , அரசியல்வாதி விருதுகள் : ஆந்திர கேசரி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   த . பிரகாசம் இந்திய சுதந்தர போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார் . இவர் ஆந்திர மாநிலம் உருவானபோது அதன் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார் .   பிறப்பும் படிப்பும் :   பிரகாசம் 1872 ஆம் ஆண்டு தற்கால ஆந்திர மாநிலம் , ஒங்கோல் நகரத்தின் அருகேயுள்ள வினோத ராயுடு பாலம் என்ற கிராமத்தில் பிராமண ஜாதியில் பிறந்தார் . இவரது பெற்றோர் வெங்கட நரசிம்மன் மற்றும் சுப்பம்மாள் . சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் , சென்னையில் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார் . பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்றார் .   சுதந்திர போராட்டத்தில் :   1907 ஆம் ஆண்டு வங்காள தேசியவாதி பிபின் ...

டி. கே. மூர்த்தி (D.K.MOORTHI)

படம்
  பெயர் : டி . கே . மூர்த்தி பிறப்பு : 13-08-1924 பெற்றோர் : தாணு பாகவதர் , அன்னபூரணி இடம் : திருவனந்தபுரம் , கேரளா வகித்த பதவி : மிருதங்க கலைஞர் விருதுகள் : சங்கீத நாடக அகாதமி விருது     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   டி . கே . மூர்த்தி என பிரபலமாக அறியப்படும் டி . கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிருதங்க கலைஞர் ஆவார் .   இளமைக்காலம் :   திருவனந்தபுரம் , கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரை என்ற ஊரில் பிறந்தார் . இவரது தகப்பனார் தாணு பாகவதர் , தாயார் அன்னபூரணி ஆவர் . இவர்களது வீட்டிற்கு எதிரில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்ததால் இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்தார்கள் . ஏழு வயதில் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார் . ‘ எவ்வாறு வாசிக்கத் தொடங்கினேன் என்று தெரியவில்லை ’ என அவரே கூறியிருக்கிறார் . திருவனந்தபுரம் அரண்மனையில் பல வித்துவான்கள் வாசித்ததை கேட்டிருக்கிறார் . அவ்வாறு ஒரு தடவை வாசித்தபோது அரண்மனைக்கு வேறொரு கச்சேரிக்கு மிருதங்கம் ...