ராமச்சந்திர நாயக்கர்
பெயர் : ராமச்சந்திர நாயக்கர்
இடம் : சேந்தமங்கலம், நாமக்கல்
வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர், படைத் தளபதி
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர். கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது. கொங்கு நாட்டில் 17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளூமை 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.
விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படுத்தி அதன்படி தென்தமிழகம், கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது. அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று. இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெறும் வரையில் ஆட்சி செய்துள்ளார். அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும், திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.
நாமக்கல் நகருக்கு பெருமையும், புகழையும் சேர்ப்பது நாமக்கல் கோட்டை. இக்கோட்டையை இராமச்சந்திர நாயக்கர் 16 ஆம் நூற்றாண்டில் அமைத்தார் என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இக்கோட்டையில் இருந்து ஆங்கிலேயர்களை திப்பு சுல்தான் எதிர்த்து போரிட்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக