தன் நாட்டு எல்லையில் எதிரியின் தொல்லை அதிகம் இருந்ததால், அரசன் தன்னுடைய மகனிடம் எதிரியிடம் போர் புரியச் சொல்லி உத்தரவிடுகிறார். தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டை நோக்கி பயணப்படுகிறான். படைகள் பயணித்து, தன்னுடைய சொந்த நகரை விட்டு நகர்ந்து எதிரியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. நகர்ந்து கொண்டே சென்ற அந்த படை, ஒரு நாள் நகருக்கு வெளியே ஒரு இடத்தில் முகாமிட்டு தங்குகின்றது. போருக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் முகாமில் தங்கியிருந்த படை வீரர்களிடம் வேறு ஒரு பணியைச் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறான் அந்த இளவரசன், காவிரியில் வெள்ளம் வரும் காலங்களில் அந்த நீர் வீணாக சென்று கடலில் கலக்கின்றதே என்று வருந்திய இளவரசன், அந்த நீரை சேமிக்க எண்ணி அந்த படை வீரர்களிடம் ஒரு பெரிய ஏரியை அங்கு வெட்டச் சொல்லி உத்தரவிடுகிறான். இளவரசனின் உத்தரவை ஏற்று படை வீரர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடிக்கிறார்கள்.....
கருத்துகள்
கருத்துரையிடுக