பி. டி. இராஜன் (P.T.RAJAN)

 



பெயர் : பி. டி. இராஜன்

இயற்பெயர் : பொன்னம்பல தியாகராஜன்

பிறப்பு : 1892

இறப்பு : 1974

இடம் : உத்தமபாளையம், தேனி

வகித்த பதவி : வழக்கறிஞர், அரசியல்வாதி

 

 வரலாறு:-வாழ்க்கை வரலாறு

 

பி. டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிச் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் . வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021