தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!
தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்! இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும் இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்! தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது! இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று! தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது! டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது! இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது! ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது! இது தவிர சென்னை சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது! தமிழகத்தில் 30 காவல் மாவட...