அனைத்து #ஆடைத்தொழிற்சாலை #பெண்களுக்கும் #சமர்ப்பிக்கிறேன்...🙏🙏 2 நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள்

ஆசைகளை எல்லாம்  அடக்கிவைத்த ஏக்கம்.....  🪡

ஐந்து மணி நேர தூக்கம் 
ஒரு மணி நேர சாலை பயணம் 
ஒன்பது மணி நேரம் 
வரை  நீடிக்கின்ற என் பணியின்
சாபம்........!🪡

என்னை  பார்ப்பவரின் ஏளனம் 
பறித்து எடுக்கிறது,
மனதை பதற வைக்கிறது,
மரியாதையின்  மகுடம் வேண்டாம்,
மனிதன் தானே என்ற மனம்  போதும் ,
                                    🪡
அழகாக நீ அணியும் ஆடையின்
பாதி கூட இல்லை என் ஊதியம்,
அறிவாயோ..?அந்த ஆடையினை
தைத்தவள் நான் என்று,,,!
                                  🪡     
அழகாக வாழ தான்  ஆசை கொள்கிறேன்...
சுய உழைப்பில்   தான் 
ஊதியம் பெறுகின்றேன்.. 
                                   🪡
மதி அற்று போய் அல்ல 
தையலில் நுளைந்தேன்..
விதி வெல்ல தான்..
                                  🪡
வேகமாக  மிதிக்கின்றேன்.
கால்களும் கனமாக,,,,
விரைவாக ஓடும் 
ஊசிகளின் இடையில் 
விரல்களையும்
துளைக்கின்றேன்....🪡

விநாடிகளும் செல்ல 
கால் தசை தளர்ந்து
மிதி வேகம் குறைய...
                                     🪡 
மணிக்கூடு ஓடி ⏰
துணி எண்ணிக்கை  குறைய,
உற்பத்தி மேற்பார்வையாளர்,,
சரமாரியான வார்த்தைகளை
கூறி குத்தி துளைக்கிறான்..

துணிகளுடன் துவண்டு 
விடுகிறது ...
கண்மணிகள் இரண்டும்....

மனம்  துளைத்த வார்த்தைகள் 
என் ஆவேசத்தையோ ,
ஆத்திரத்தையோ
தூண்ட வில்லை..

கனமாய்  போன கால்களின்
வேகத்தையே...
அதிகரித்து விடுகிறது...

அடிமையோ...!
புரியவில்லை
என் அவசரமும்,ஆவேசமும்
மாத இறுதி  ஊதியத்தில்
மாற்றத்தை  கொண்டு வந்து 
விடுமோ... என்ற பயம் தான் ,

குரல் உயர்த்த முடியாமல் இல்லை 
குடும்பத்தின் நிலை  சரியில்லை
கூடி பணி புரிதலில் தவறில்லை
குலமாக வேறுபட்டதில் தான் இன்னல் 

தைத்து குவித்த ஆடைகளின் 
எண்ணிக்கையோ பெரிது.
அதில் கிடைத்த சொற்ச்சமோ சிறிது
எம்முடன் பழுகிப் பெருகுவோர் அரிது
காணும்   இன்னல்களோ மிக பெரிது,,
 
மக்கள் பார்வையில் 
மாற்றம் கிட்டுமா அறியவில்லை
எமக்கான அவப்பெயர்கள் மாறுமா ?
புரியவில்லை ,,,,

இகழ்ந்துரைக்க வேண்டாம்.
இயந்திரங்களுடன் 
போராடி மிதித்து
மானம் காக்க  மணிக்கணக்கில்
தைத்தெடுக்கும் இத்தொழில்
நற்தொழிலே...🙏

ஆடை தொழிற்சாலையில்🪡
பணி புரியும் அனைத்து  பெண்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். 

பெண்களின் மனதை காயப்படுதாமல் உதவி செய்து ஒன்று சேர்ந்து பணி புரிவோம்.

இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். ..
நீங்கள் பயனடைந்து போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்

Source https://chat.whatsapp.com/HVnczPQaF087HWhRvrZFDT

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021