சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (SATHAVATHANI SEYGUTHAMBI PAVALAR)
பெயர் : சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறப்பு : 31-07-1874 இறப்பு : 13-02-1950 பெற்றோர் : பக்கீர் மீரான் சாகிபு , அமீனா அம்மையார் இடம் : நாகர்கோவில் , தமிழ்நாடு வகித்த பதவி : தமிழ் புலவர் வரலாறு :- வாழ்க்கை வரலாறு சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும் புலவர் . சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர் . கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ் , அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் , சில நாடக நூல்களையும் எழுதியவர் . கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர் . இளமைப் பருவம் நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31 இல் பிறந்தார் . அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன . பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் ...