கண்டறிய இயலாச் சான்று ! [ Not Traceable Certificate ]
ஆவணங்கள் காணவில்லை எனச் சான்று பெற அல்லல்பட்டதற்கு விடிவு, சென்னை உயர்நீதிமன்ற மனு CRL.O.P.No.3307/2022 - ன் மூலம் கிடைத்துள்ளது. அதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 1. ஆவணங்கள் காணவில்லை என காவல் நிலையத்தில் விண்ணப்பிப்போர், அந்த ஆவணங்களின் சொத்துரிமையாளராகவோ அல்லது அவரின் அதிகாரம் பெற்ற முகவராகவோ இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தோடு கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் : (i). தொலைந்துபோன ஆவணத்தின் சார்பதிவாளர் அலுவலகத்தின் ( விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்) சான்றிட்ட இரண்டு நகல்கள். (ii ). விண்ணப்பதாரரின் அல்லது அவரது முகவரின் அன்றையக் காலத்திய நிழற்படம். (iii ). ஆதார் அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டை (அ) கடவுச்சீட்டின் நகல் ( பிற சான்றுகள் ஏற்கப்படமாட்டாது ). (iv ). பத்தி 6 - ல் குறிப்பிட்டவாறு மெய்ப்படிவ செய்தித்தாள் விளம்பரங்கள். ( v ). பத்தி 7,8 - களில் குறிப்பிட்டவாறு...