இடுகைகள்

Today History : 29.07.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- 👉 1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆரம்பிக்கப்பட்டது. 👉 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார். முக்கிய தினம் :- சர்வதேச புலிகள் தினம் 👉 அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. 👉 மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த நாள் :- பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 👉 தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சியில் பிறந்தார். 👉 இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டத்தையும், வித்தியாரத்தினம், ...

திரு. வி. கலியாணசுந்தரனார் (Thiru.V.Kalyanasundaranar)

படம்
  பெயர் : திரு . வி . கலியாணசுந்தரனார் பிறப்பு : 26-08-1883 இறப்பு : 17-09-1953 பெற்றோர் : விருத்தாசல முதலியார் , சின்னம்மா இடம் : துள்ளம் , சைதாப்பேட்டை , காஞ்சிபுரம் , தமிழ்நாடு புத்தகங்கள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் , தமிழ்த்தென்றல் , முருகன் அல்லது அழகு , உள்ளொளி , முடியா ? காதலா ? சீர்திருத்தமா ?, பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை , தேசபக்தாமிர்தம் , இந்தியாவும் விடுதலையும் வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீரர்     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார் . விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார் . 1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார் . 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார் . சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது . இதனால் கல்வி தடைப்பட்டது . நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லவில்லை .   மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலே...

பி. கக்கன் (Kakkan)

படம்
  பெயர் : பி . கக்கன் பிறப்பு : 18-06-1908 இறப்பு : 23-12-1981 பெற்றோர் : பூசாரி கக்கன் இடம் : தும்பைபட்டி , மேலூர் , மதுரை வகித்த பதவி : அரசியல்வாதி , இலக்கியவாதி     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   கக்கன் , இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் ( கமிட்டித் ) தலைவர் , இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும் , தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார் . கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர் . அவர் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர் .   வாழ்க்கை சுருக்கம் :   கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம் , மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில் பிறந்தார் . இவரின் தந்தை பூசாரி கக்கன் , கிராமக் கோயில் அர்ச்சகராக ( பூசாரியாக ) ப் பணிபுரிந்தவர் . தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் ...

க. சீ. கிருட்டிணன்

படம்
  பெயர் : க . சீ . கிருட்டிணன் பிறப்பு : 04-12-1898 இறப்பு : 14-06-1961 பெற்றோர் : கரியமாணிக்கம் சீனிவாசம் இடம் : விருதுநகர் , தமிழ்நாடு , இந்தியா புத்தகங்கள் : நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம் , பூமியின் வயது என்ன , சூரிய சக்தி , உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன் வகித்த பதவி : இயற்பியலாளர் விருதுகள் : பத்ம பூஷன் , ராயல் சொசைட்டி ஃவெல்லோ (FRS), செவீரன் (Knighthood)     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார் . ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர் . சி . வி . இராமன் உடன் இணைந்து இவரும் இக்கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார் . ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927- ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘ நேச்சர் ’ (Nature) என்ற இதழில் ( சுமார் 20 கட்டுரைகள் ) எழுதியுள்ளார் . காந்தப் படிகங்கள் பற்றியும் , சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான க...

வாசுதேவன் பாஸ்கரன் (Vasudevan Baskaran)

படம்
  பெயர் : வாசுதேவன் பாஸ்கரன் பிறப்பு : 17-08-1950 பெற்றோர் : வாசுதேவன் , பத்மாவதி இடம் : ஆரணி , சென்னை , தமிழ்நாடு வகித்த பதவி : வளைத்தடி பந்தாட்ட வீரர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது , அர்ஜுனா விருது     வரலாறு :- வாழ்க்கை வரலாறு   வாசுதேவன் பாஸ்கரன் , பிறந்த ஊர் ஆரணி ஆகும் . இவரது தந்தை வாசுதேவன் மற்றும் தாய் பத்மாவதி ஆவர் . இவர் தமது படிப்பை வெஸ்லி பள்ளியிலும் , லயோலா கல்லூரியிலும் மேற்கொண்டார் .   வாசுதேவன் பாஸ்கரன் , ஒரு சிறந்த வளைத்தடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர் . இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார் . இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது . 1979-1980 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதைப் பெற்றார் .   இவர் 11 வயதில் வளைத்தடிப் பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தார் . அகில இந்திய பள்ளி அணியில் இடம்பெற்றார் . கல்லூரி நாளில் பல்கலைக்கழக அணிக்காக ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்த...

பெருஞ்சித்திரனார் (Perunjitharanar)

படம்
  பெயர் : பெருஞ்சித்திரனார் பிறப்பு : 10-03-1933 இறப்பு : 11-06-1995 பெற்றோர் : துரைசாமியார் , குஞ்சம்மாள் இடம் : சமுத்திரம் , சேலம் புத்தகங்கள் : நூறாசிரியம் பள்ளிப் பறவைகள் , நெருப்பாற்றில் எதிர் நீச்சல் , கனிச்சாறு , கொய்யாக் கனி , தமிழீழம் , இளமை உணர்வுகள் , இளமை விடியல் , உலகியல் நூறு , எண் சுவை எண்பது , ஐயை ( பாவியம் ), ஓ ! ஓ ! தமிழர்களே , கற்பனை ஊற்றுக் கட்டுரைகள் , கழுதை அழுத கதை வகித்த பதவி : எழுத்தாளர்   வரலாறு :- வாழ்க்கை வரலாறு   இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார் . தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் , மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும் , மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர் . தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான் . தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே . 20 முறை சிறை சென்றும் ,...