EX-டி.ஜி.பி திரிபாதி: கண்ணீர் மல்க வழியனுப்பிய காவல்துறை அதிகாரிகள்
தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின், 29 வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ஜே.கே.திரிபாதி. 30 வது டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஜே.கே.திரிபாதி விடைபெற்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி, தமிழக கேடரில் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியிலும் அதன்பின் சென்னைக்கும் மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, குற்றப்பிரிவு ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்துள்ளார். இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக ...