இடுகைகள்

கேரள ஓணம் பண்டிகை (KERALA'S ONAM FESTIVAL)

படம்
கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.  இதை கேரளாவின் “அறுவடைத் திருநாள்” என்றும் அழைப்பர்.  மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.  கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர்.  வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆன கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள்.  ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.  அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான...

கே. பி. ஜானகி அம்மாள் (K.P.JANAGIYAMMAL)

படம்
பெயர் : கே. பி. ஜானகி அம்மாள் பிறப்பு : 09-12-1917 இறப்பு : 01-03-1992 பெற்றோர் : பத்மநாபன், லட்சுமி இடம் : திருநகர், மதுரை வகித்த பதவி : சுதந்திர போராட்ட வீராங்கனை, மேடை நாடக கலைஞர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு கே. பி. ஜானகி அம்மாள் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர். இவர் 9 டிசம்பர் 1917 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் திருநகர் என்னும் ஊரில் பத்மநாபன் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார். கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ...

டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு (P.VARATHARAJULY NAIDU)

படம்
பெயர் : டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு பிறப்பு : 04-06-1887 இறப்பு : 23-07-1957 பெற்றோர் : பெருமாள் நாயுடு, குப்பம்மாள் இடம் : சேலம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி, விடுதலை போராட்ட வீரர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பெ. வரதராஜுலு நாயுடு இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பிறப்பு: தமிழ்நாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வரதராஜுலு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில் அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்த கொண்டார். உயர்நிலைக் கல்வி கற்கும் பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். அவர் சித்...

டி.எம். சௌந்தரராஜன் (T.M.SOUNDARAJAN)

படம்
  பெயர் : டி.எம். சௌந்தரராஜன் பிறப்பு : 24-03-1922 இறப்பு : 25-05-2013 பெற்றோர் : தொ.அ. மீனாட்சி ஐயங்கார் இடம் : மதுரை, சென்னை மாகாணம், தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா வகித்த பதவி : திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் விருதுகள் : பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர். ஆரம்ப கால வாழ்க்கை தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் ...

பேராசிரியர் சி. இலக்குவனார் (C.LAKKUVANAR)

படம்
பெயர் : பேராசிரியர் சி. இலக்குவனார் இயற்பெயர் : இலட்சுமணன் பிறப்பு : 17-11-1909 இறப்பு : 03-09-1973 பெற்றோர் : சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி இடம் : வாய்மைமேடு, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு புத்தகங்கள் : எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933), மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்), துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்), தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்), என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972), அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949), அம்மூவனார் (ஆராய்ச்சி) வகித்த பதவி : தமிழ்  பேராசிரியர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பேராசிரியர் சி. இலக்குவனார், திருவள்ளுவராண்டு 1930, கார்த்திகைத் திங்கள், முதல் நாள் தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மைமேடு என்னும் சிற்றூரில், குறுநிலக்கிழாராகவும், ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர் - இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பேராசிரியர் சி. இலக்குவனார், தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி...

கிருபானந்த வாரியார் (KIRUBANANTHA VARIYAR)

படம்
பெயர் : கிருபானந்த வாரியார் இயற்பெயர் : கிருபானந்த வாரி பிறப்பு : 25-08-1906 இறப்பு : 07-11-1993 பெற்றோர் : மல்லையதாசர், மாதுஶ்ரீ கனகவல்லி இடம் : காட்பாடி, வேலூர் மாவட்டம் புத்தகங்கள் : சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம் வகித்த பதவி : ஆன்மீகவாதி விருதுகள் : இசைப்பேரறிஞர் விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். ‘அருள்மொழி அரசு’, என்றும் ‘திருப்புகழ் ஜோதி’ என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு :  இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஶ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி ப...

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் லாரி பேஜ் (LORRY PAGE)

படம்
பெயர் : லாரி பேஜ் பிறப்பு : 26-03-1973 பெற்றோர் : கார்ல், குளோரியா இடம் : அமெரிக்கா வகித்த பதவி : கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் வரலாறு:-கூகுள் தேடுபொறியின் நாயகன்..!! 🌟பெருந்தவம் இருந்து அரிய வரம் பெற்றது எல்லாம் புராணக்காலம். வேண்டியவற்றை சிங்கிள் க்ளிக்கில் மைக்ரோ நொடிகளில் கண்டு அடைதல்தான் கூகுள் காலம். 🌟இணைய ஜாம்பவானான கூகுள் (Google) இன்று உலகின் தலைசிறந்த தேடுபொறி இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. 🌟தற்போதைய காலத்தில் ஏதேனும் ஒன்றை தேடுவது என்பது மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. கூகுளில் ஏதேனும் ஒன்றை தேடினால் அதற்கான பதில் ஒரு சில நொடிகளிலேயே கிடைத்துவிடுகிறது. நமது பெற்றோருக்கு தெரியாத விஷயங்கள் கூட கூகுளில் உள்ளது. 🌟கூகுளை விட என்னை புரிந்தவர் யாருமில்லை என்று புதுமொழிகளும் கூட வந்துவிட்டது. இந்த புதுமொழிக்கு ஏற்றாற்போல் நாம் தேடும் சொற்களை தவறாக உள்ளீடு செய்தாலும் அதை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான பதிலை நமக்கு கொடுத்துவிடும். 🌟கூகுளில் வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்ற எண்ணற்ற செயலிகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம் நம் தேடலுக்கான தெளிவான பதில்க...