திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு : பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. ( மற்ற நான்கு ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர் ). திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட ஆண்டு : தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறத...