எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் (S.KASTHURI RANGA AYYANAR)
பெயர் : எஸ் கஸ்தூரி ரங்கா ஐயங்கார் பிறப்பு : 15-12-1859 இறப்பு : 12-12-1923 பெற்றோர் : சேஷ ஐயங்கார் இடம் : கும்பகோணம், தமிழ்நாடு வகித்த பதவி : அரசியல்வாதி, பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், ஹிந்து நிர்வாக இயக்குனர் வரலாறு:-வாழ்க்கை வரலாறு பிறப்பு கஸ்தூரி ரங்கன், கும்பகோணம் அருகேயுள்ள இன்னாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சேஷ ஐயங்காருக்கு மூன்றாவது மகனாக 15.12.1859-ல் பிறந்தார். சேஷ ஐயங்கார் குடும்பத்தினர் விஜயநகர சாம்ராஜ்யத்திலும் தஞ்சை மராட்டிய அரசிலும் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். இன்னாம்பூரிலும் கபிஸ்தலத்திலும் பின்னர் கும்பகோணத்திலும் படித்தார். 1879 -ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கஸ்தூரி ரங்கன் பட்டம் பெற்றார். 1881-ல் சார்பதிவாளர் பணியில் சேர்ந்தார். பிறகு, சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் 1884-ல் சட்டக் கல்வி முடித்தார். வழக்கறிஞரானதும் கோவையை நோக்கி நகர்ந்தார் கஸ்தூரி ரங்கன். அங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டாகவும், சிறையைப் பார்வையிடும் சிறப்புப் பார்வையாளராகவும் ஆட்சியரால் நியமிக்கப்பட்டார். அந்நாளில் ‘தி இந்து’ வின் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் 1902-ல் ஓய்வுபெற்றார். அந்த பத...